ஈரோட்டில் அசையாமல் குழந்தை.. கிச்சனுக்கு அவசரமாக ஓடிய கணவர்.. மனைவியை கண்ட காட்சி.. பரபரத்த வெள்ளோடு
ஈரோடு: ஒன்றரை வயது ஆண் குழந்தை, வீட்டிலுள்ள தொட்டிலில் தூங்கி கொண்டிருந்தபோது திடீரென இறந்துவிட்டது.. அந்த குழந்தையின் அம்மாவும் சமையலறையில் பிணமாக கிடந்தார்.. இதுகுறித்த விசாரணையை போலீசார் நடத்தியபோது, இதுகுறித்த பகீர் தகவல் வெளியாகி, ஈரோடு மாவட்டத்தையே பரபரபாக்கி வருகிறது.. என்ன நடந்தது வெள்ளோடு பகுதியில்? யாரிந்த இளம்தாய்?
ஈரோடு அருகே உள்ளது வெள்ளோடு என்ற பகுதி.. இங்குள்ள காந்திபுரத்தை சேர்ந்தவர் கவின்குமார்.. 32 வயதாகிறது.. பெருந்துறையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய 28 வயது மனைவி அமராவதி.. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆதிரா என்ற ஆண் குழந்தை உள்ளது.. இவர்களது பக்கத்து வீட்டிலேயே கவின்குமாரின் அம்மா, அப்பா வசித்து வருகிறார்கள்.
ஈரோடு இளம்தாய்
சம்பவத்தன்று இரவு குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு, தம்பதி இருவருமே தூங்க சென்றுவிட்டனர்.. பிறகு எதேச்சையாக விடிகாலையில் கவின்குமார் கண்விழித்தபோது, பக்கத்தில் படுத்திருந்த அமராவதியை காணவில்லை.. இதனால் பயந்துபோன கவின்குமார் வீட்டின் அறைகளில் அமராவதியை தேடினார்..
அப்போது கிச்சனில் நைலான் கயிற்றில் தூக்கில் அமராவதி தொங்கிக்கொண்டு இருந்ததை கண்டு அலறி துடித்தார்.. அவரது சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டிலிருந்த அப்பா,அம்மா உள்ளிட்ட அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர்.. அமராவதியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அமராவதி ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்..
தொட்டிலில் குழந்தை
இதற்கு நடுவே, வீட்டில் தொட்டிலில் தூங்கி கொண்டிருப்பதாக நினைத்த குழந்தையும் அசைவற்று கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.. உடனே குழந்தையையும் அதே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். டாக்டர்கள் அந்த குழந்தையும் இறந்துவிட்டதாக சொல்லிவிட்டார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று, தாய் - குழந்தையின் சடலங்களை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.
தகராறு - சண்டை கிடையாது
ஆனால், இந்த தற்கொலை, மரணத்துக்கான காரணம் தெரியவில்லை.. தம்பதிக்குள் எந்த சண்டையும் தகராறும் கிடையாது என்று கணவர் போலீசில் கூறுகிறார்.. குழந்தையின் உடம்பில் எந்த காயங்களும் இல்லை.. அமராவதியின் உடம்பிலும் எந்த காயங்களும் இல்லை..
தொட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தையின் முகத்தை தலையணையால் அழுத்தி கொன்றுவிட்டு, அதன்பிறகு அமராவதி கிச்சனுக்கு சென்று தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள் என்றாலும், ஏன் அமராவதி குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்? என்று தெரியவில்லை.. பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தினர்.
திடீர் திருப்பம்
இந்நிலையில், திடீர் திருப்பமாக மனைவியை கொன்றதே கணவன்தான் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குழந்தையையும் கொன்றதும் கவின்குமார்தானாம்.. போலீசார் விசாரணையில் வசமாக சிக்கியிருக்கிறார் கவின்குமார்.
தாயும் உயிரிழந்த விவகாரத்தில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடிய நிலையில், போலீசார் விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவி, குழந்தையை கொன்றதாக கவின் பிரசாத் வாக்குமூலம் அளித்துள்ளநிலையில், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் அவரிடம் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
வாக்குமூலம்
முன்னதாக, தாய் மற்றும் குழந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.. இதற்கு பிறகே போலீசார் தங்கள் பாணி விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.. அப்போதுதான், "மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாகவும், குழந்தை தனக்கு பிறந்ததுதானா? என்ற சந்தேகம் அதிகரித்து வந்ததால், இரண்டு பேரையுமே கொன்றுவிட்டதாகவும் வாக்குமூலம் தந்துள்ளார் கவின்குமார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications