ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் ஐக்கியம்
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவை சேர்ந்த செந்தில் முருகன் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அவர் தற்போது திமுகவில் இணைந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி முடிந்தது.

இந்த நிலையில் இந்த தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரக்குமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகிறார்கள். அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக, உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்திருந்தன.
இந்த நிலையில் அதிமுக நிர்வாகியான செந்தில் முருகன், இந்த தேர்தலில் போட்டியிட சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து வேட்புமனுக்களை வாபஸ் பெற நேற்றைய தினம் கடைசி நாள் என்பதால் செந்தில் முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் இன்றைய தினம், திமுகவில் இணைந்தார். வி.சி.சந்திரகுமாருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் செந்தில் முருகன் திமுகவில் ஐக்கியமானார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தற்போது 3ஆவது முறையாக தேர்தல் நடைபெறுகிறது. அதாவது 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார்.
இவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்ததை அடுத்து 2023 ஆம் ஆண்டு இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் செந்தில் முருகனை வாபஸ் பெறுமாறு ஓபிஎஸ் தெரிவித்ததை அடுத்து அவர் வாபஸ் பெற்றார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்ததும் செந்தில் முருகன், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அவருக்கு ஈரோடு மாநகர மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதிமுக புறக்கணித்தாலும் மீண்டும் ஈரோடு கிழக்கு தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications