மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. இதுதான் நம்ம தமிழ்நாடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
ஈரோடு: ஈரோட்டில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த தோழிகள் இணைந்து வந்து முதல்முறையாக வாக்குப் பதிவு செய்தனர்.
நேற்றைய தினம் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்துள்ளது.. முதற்கட்ட தேர்தல் தமிழ்நாடு, மணிப்பூர் உள்ளிட்ட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது.

மணிப்பூர்: இதில், மணிப்பூர் மாநிலத்தில் மட்டும், மொய்ராங் தொகுதியில் தமன்போக்பியிலிருக்கும் வாக்குச்சாவடி அருகே திடீர் கலவரம் ஏற்பட்டுவிட்டது.. மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்துவதற்காக, காலையிலேயே வாக்குச்சாவடிகளில் வரிசையில் வந்து நின்றிருந்தனர்.. அப்போது, திடீரென அடையாளம் தெரியாத ஒரு கும்பல், அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தியது.
துப்பாக்கி சூட்டில் யாருக்கும் எந்த காயமும் இல்லை என்றாலும், இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திவிட்டது. மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களில் உள்ளவர்கள், இனக்கலவரத்தால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 85 சிறப்பு வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடந்த நிலையில், இப்படி ஒரு வன்முறை நடந்து அம்மக்களுக்கு கிலியை தந்துவிட்டது. இது குறித்து விசாரணைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
வன்முறை: இப்படி வன்முறை, துப்பாக்கி சூடு இந்தியாவின் ஒருபகுதியில் நடந்தாலும், நம்முடைய தமிழ்நாட்டில் எந்தவிதமான கலவரமுமில்லாமல், அமைதியான முறையில், நேர்மையான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
தேர்தல் நியாயமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சியை சேர்ந்த, டாக்டர் ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த் உட்பட அனைவருமே காலையில் தங்களது செய்தியாளர் பேட்டிகளில் சொல்லியிருந்தார்கள்.
நெகிழ்ச்சி: அதுமட்டுமல்ல, மிகவும் நெகிழ்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று ஈரோட்டில் நடந்துள்ளது.. ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் அந்த பகுதி மக்கள் வாக்களித்து கொண்டிருந்தார்கள்.
அப்போது, 3 பெண்கள் வாக்களிக்க வந்திருந்தனர்.. அவர்களது பெயர்கள், பிரியதர்ஷினி, ஜவஹாரா ருக்கையா, இலக்கிய சம்பத் என்பதே 3 அவர்கள் பெயர்களாகும்.. இவர்கள் 3 பேருமே ஒன்றாக வந்திருந்தனர்.. இவர்கள் 3 பேருமே நெருங்கிய தோழிகள் ஆவர்.. இவர்கள் 3 பேருமே, முதல்முறையாக வாக்களிக்க வந்திருந்தனர்.
நெருக்கம்: இவர்கள் 3 பேருமே - இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள்.. சின்ன வயசிலிருந்தே ஒன்றாக படித்தவர்களாம்.. அப்போது முதல் நெருக்கம் குறையாமல், நட்பை வளர்த்துள்ளனர். தற்போது முதல்முறையாக ஓட்டு போடப்போவதால், 3 பேருமே புது டிரஸ் அணிந்து கொண்டு வந்து, வாக்கு செலுத்தினார்கள்.
இதுகுறித்து தோழிகள் மூவரும் சொன்னபோது, "இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ என 3 மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எந்த வேற்றுமையும் எங்களுக்குள் கிடையாது.. வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நாட்டின் பாரம்பரியத்தை பின்பற்றும் வகையில், நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம்.. முதல் முறையாக வாக்களிப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் மூவருமே இணைந்து எங்கள் ஜனநாயக கடமையாற்றியதில் அதைவிட மகிழ்ச்சி" என்று பூரித்து சொன்னார்கள் இந்த தோழிகள்.
மனிதாபிமானம்: எவ்வளவுதான் இடர்பாடுகளையும், இன, மத ரீதியான பிளவுகளையும், சில குரூரர்கள் கட்டவிழ்த்து விட்டாலும், மனிதாபிமானமும், ஈரம் கசியும் இதயமும் இங்குள்ளவரை, சகிப்புத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும், நம்மிடமிருந்து யாராலும் ஒருபோதும் பிரித்து விட முடியாது என்பதைதான் இதுபோன்ற "உறவுகள்" பறைசாற்றி கொண்டிருக்கின்றன...
மத மாற்றங்களை புறந்தள்ளிவிட்டு மனித மனங்களும் ஒன்றுபட்டு கொண்டிருக்கின்றன.. தழைத்தோங்கட்டும் மனித நேயம்..!!! அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்..!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications