ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. இன்று இறுதி வேட்பாளர் பட்டியல்.. நாதகவுக்கு மைக் சின்னம் கிடைக்குமா?
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகவுள்ளது. இதுவரை 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்பாத வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற இன்றே கடைசி நாளாகும். அதேபோல் நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் மைக் சின்னம் ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2023ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, பிப்.8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் திமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ விசி சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதேபோல் நாதக சார்பாக சீதாலட்சுமி வேட்பாளராக களமிறங்கி உள்ளார். அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில் 17ஆம் தேதி வரை மொத்தமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 65 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் திமுக மற்றும் நாதக வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கலில் உறுதிமொழி ஆவணம் இணைக்கப்படாததால் தள்ளுபடி செய்யப்பட்டன. அதேபோல் சுயேட்சை ஒருவரின் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன் காரணமாக மொத்தமாக திமுக மற்றும் நாதக வேட்பாளர்களின் வேட்புமனு உட்பட 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பாத வேட்பாளர்கள், இன்று காலை 11 முதல் 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
இதன்பின் மாலை 3 மணியளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு அவர்களின் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். தொடர்ந்து நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் மைக் சின்னம் ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதன்பின் சுயேட்சைகளுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம்












Click it and Unblock the Notifications