அதிமுக ரத்தமாச்சே! புரட்சித் த.. என ஆரம்பித்து சமாளித்து தளபதி என்ற செங்கோட்டையன்! கவனிச்சீங்களா?
ஈரோடு: ஈரோட்டில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று மக்களை சந்தித்தார். முன்னதாக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் பேசினார். பாக்கெட்டில் ஜெயலலிதா படம், அதனுடன் தவெக கொடியுடன் பேசிய அவர் தனது பேச்சின் போது புரட்சி த.. என ஆரம்பித்தார் திடீரென சுதாரித்த அவர் இது தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டம் என புரிந்து கொண்டு புரட்சித் தளபதி என சமாளித்தார்.
உண்மையில் விஜயை இளைய தளபதி, தளபதி என்று தான் அழைப்பார்கள். விஷாலை தான் புரட்சி தளபதி என்பார்கள். அதிமுக கூட்டம் என நினைத்து பழக்க தோஷத்தில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அல்லது புரட்சித் தமிழர் என பேச வந்த செங்கோட்டையன் அதன்பிறகு சமாளித்து இருப்பார் என்கின்றனர் அதிமுகவினர்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று (18ஆம் தேதி) தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த உள்ளார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின்னர் நடைபெறும் முதல் நிகழ்ச்சி என்பதாலும், கரூர் சோக சம்பவத்திற்கு பிறகு நடைபெறும் நிகழ்ச்சி என்பதாலும், விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பு பொதுமக்களுக்கும் அரசியல் வட்டாரங்களுக்கும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டில் முதன்முறையாக பொதுவெளியில் மக்களை சந்திக்கும் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அதிமுக முன்னாள் அமைச்சர், தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருக்கும் செங்கோட்டையன் பிரம்மாண்டமாக செய்திருந்தார்.
தொடர்ந்து கோவையில் இருந்து விஜய் ஈரோடு வந்ததும் அவரை வரவேற்ற செங்கோட்டையன், தொடர்ந்து விஜயின் பிரச்சார வாகனத்தில் ஏறி பேசினார். முதன் முறையாக பொதுவெளியில் செங்கோட்டையன் இந்த நிகழ்ச்சியில் தான் பேசியது குறிப்பிடத்தக்கது. சட்டையில் ஜெயலலிதா படத்திற்கு அருகே தவெக கொடியை குத்தி இருந்த செங்கோட்டையன் பேச தொடங்கினார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,"பெரியார் பிறந்த மண்ணிற்கு தலைவர் விஜய் வந்துள்ளார். நாளை விஜய் முதல்வராவதற்காக கூடிய கூட்டமாக தெரிகிறது. தமிழக மக்கள் நாளை ஆள வேண்டும் என நினைப்பது புரட்சி தளபதியை தான். எங்கள் தலைவர் மக்களுக்காக மட்டுமே வாழ்ந்து வருகிறார். 500 கோடியை விட்டு வந்துள்ளார். புரட்சித்தலைவருக்கு பிறகு புரட்சி தளபதி தான். 234 தொகுதிகளில் அவர் யாரை கை காட்டுகிறாரோ அவர்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்கள்" என்றார்.
முன்னதாக விஜய் குறித்து பேசிய செங்கோட்டையன் தமிழகத்தில் நிச்சயம் புரட்சி தளபதி தலைமையில் ஆட்சி அமையும் என பேசினார். அப்போது ஒரு சில நொடிகள் அவர் தடுமாறியது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் பல ஆண்டுகளாக இருந்த செங்கோட்டையன் புரட்சித் தலைவர் என்றும், புரட்சித்தலைவி என்றும் பேசியே பழக்கப்பட்டவர், கடந்த சில மாதங்களாக புரட்சித்தமிழர் எடப்பாடி என பேசினார்.
இந்த நிலையில் புரட்சி என்று வாயில் வந்ததும் தடுமாறிய அவர் தளபதி என கூறி சமாளித்தார். உண்மையில் புரட்சித் தளபதி என்பது நடிகர் விஷாலைக் குறிக்கும் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயை தளபதி என்றும் இளையதளபதி என்று மட்டும் தான் அவரது ரசிகர்கள் அழைப்பார்கள். இந்த நிலையில் அதிமுகவில் நீண்ட காலமாக இருந்ததால் பழக்க தோஷத்தில் அப்படி பேசி இருக்கலாம் என்கின்றனர்.
-
TVK candidate list: தவெக வேட்பாளர் பட்டியல்! கோபியில் ’சீனியர்’ செங்கோட்டையன்! 10வது முறையாக களம் காண்கிறார்! -
விஜய் பெயரளவில் தான் கிறிஸ்தவர்.. சொந்த குடும்பத்தையே காப்பாற்ற முடியாதவர்.. அருட்தந்தை விமர்சனம்! -
எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள் -
தவெக வேட்பாளர்களை அறிவித்த சில நிமிடங்களில் விஜய்க்கு அதிர்ச்சி.. பறக்கும் படை அதிகாரிகள் ரெய்டு -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
ஆதவ் ஆர்ஜுனாவின் மாஸ்டர் பிளான்.. வில்லிவாக்கத்தை குறிவைத்தது ஏன்? திமுக அதிமுகவுடன் நேரடி போட்டி -
ரூ. 20 லட்சம் கடன் தருவோம்.. இளைஞர்களை ஈர்க்க மேஜர் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த தவெக தலைவர் விஜய்! -
"நேர்காணல் கூட இல்லை.." விஜய் வேட்பாளர்களை அறிவிக்கும் போதே போராட்டத்தில் இறங்கிய தவெகவினர் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
திருப்பூர் வடக்கில் சத்யபாமா.. 234-க்கு 23 பெண் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்த விஜய்! -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
Vijaykanth: திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக! விஜயகாந்த் கட்சியை விஜய் இப்படி பேசலாமா?












Click it and Unblock the Notifications