ஈரோட்டில் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை.. மற்றொரு ஆசிரியை கணவர் பரபரப்பு வாக்குமூலம்
ஈரோடு: ஈரோட்டில் அரசு பள்ளி ஆசிரியை கொலை வழக்கில் கார் டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். அதனை இப்போது பார்ப்போம்.
ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த மனோகரனுக்கு 62 வயது ஆகிறது. இவர் ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். இவரது மனைவி புவனேஸ்வரிக்கு 54 வயது ஆகிறது. புவனேஸ்வரி அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

தினமும் காலையில் எழுந்த உடன் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் மனோகரன் உடற்பயிற்சிக்கு செல்வது வழக்கம். அதேபோல் சம்பவம் நடந்த கடந்த ஆகஸ்ட் 20 தேதி மனோகரன் நடைபயிற்சி மேற்கொண்டார். நடைபயிற்சி முடிந்து வீடு திரும்பிய போது, ரத்த வெள்ளத்தில் வீட்டின் படுக்கை அறையில், புவனேஸ்வரி பிணமாக கிடந்தார்.
அவர் அணிந்திருந்த நகைகள் மட்டும் காணாமல் போய் இருந்தது. மனோகரனின் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை.
இந்த கொலை தொடர்பாக தகவல் அறிந்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். கொலையாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கொலை நடந்து 4 நாட்கள் ஆகியும் எந்தவித தடயமும் கிடைக்காமல் இருந்தது. ஏனெனில் கொலைக்கான காரணங்கள் என்ன, யார் செய்தார்கள் என்பது குறித்து போலீசாருக்கு குழப்பம் இருந்தது. ஏனெனில் நகைகள் வீட்டில் அப்படியே இருந்தது
இந்தநிலையில் நேற்று முன்தினம் தனிப்படை போலீசாருக்கு அடிக்கடி புவனேஸ்வரி வீட்டு மாடியில் குடியிப்பவரை பார்க்க வந்து போன பெரிய சடையம்பாளையத்தை சேர்ந்த கார் டிரைவர் ஜெயக்குமார் (52) குறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. அவருக்கு ஆசிரியை புவனேஸ்வரி கொலை வழக்கில் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆசிரியை புவனேஸ்வரியின் வீட்டின் மேல் மாடியில் பல்ராம் என்பவர் வாடகைக்கு குடியிருக்கிறார். இவரும், ஜெயக்குமாரின் மனைவியும் ஒரே பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்கள்.
இதனால் பல்ராமிற்கும், ஜெயக்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பல்ராமை சந்திக்க அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார் டிரைவர் ஜெயகுமார். அப்போது ஆசிரியை புவனேஸ்வரியிடம் அதிக அளவு நகை, பணம் இருப்பதை அறிந்து கொண்ட ஜெயகுமார், புவனேஸ்வரியின் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடிக்க திட்டம் போட்டார்.
தினமும் நடைபயிற்சிக்கு செல்லும் போது மனோகரன் கதவை பூட்டாமல் செல்வதை கவனித்த ஜெயக்குமார், அவரது வீட்டிற்குள் சம்பவதன்று நுழைந்துள்ளார். அங்கு படுக்கை அறையில் இருந்த அலமாரியை திறக்க முயன்றபோது, தூங்கிக்கொண்டு இருந்த ஆசிரியை புவனேஸ்வரி கண் விழித்து என்னவென்று வந்து பார்த்துள்ளார்.
எங்கே அவர் தன்னை காட்டிக்கொடுப்பாரோ என்று பயந்த ஜெயக்குமார், கையில் வைத்திருந்த கத்தியால் புவனேஸ்வரியின் கழுத்தில் ஓங்கி குத்தி உள்ளார். இதில் புவனேஸ்வரி ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து புவனேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 2 தங்க சங்கிலிகளை மட்டும் திருடிக் கொண்டு உடனே அங்கிருந்து ஜெயக்குமார் தப்பி ஓடினார். கிடைத்த தடயத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார், ஜெயக்குமாரை கைது செய்திருக்கிறார்கள்" என்றார்.
இதனிடையே டிரைவர் ஜெயக்குமார் போலீசில், கொலை குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். அவருக்கு ரூ.15 லட்சம் கடன் இருந்துள்ளது அதை அடைப்பதற்காக நகை மற்றும் பணத்தை திருட முயன்றுள்ளார். அப்போது புவனேஸ்வரி சத்தமிட்டார். உடனே அவரை கத்தியால் குத்திக்கொலை செய்திருக்கிறார். இந்த தகவலை போலீசிடம் ஜெயகுமார் கூறினார். ஜெயக்குமாரிடம் இருந்து, 8¼ பவுன் நகை மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான ஜெயக்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications