மாஸ்டர்பிளான்.. அதிமுகவின் அஸ்திவாரத்தை ஆட்டிய திமுக.. ஈரோடு கிழக்கு வெற்றிக்கு காரணமான அந்த 3 பேர்!

தேர்தல் பணிகளை செய்யும் ஒவ்வொரு நிர்வாகியும் குறைந்தது 100 பேரிடம் பேச வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தனர்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் முன்னணி அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரின் செயல்பாடுகள் முக்கிய காரணமாக இருந்தன. அதிலும் 3 முக்கியமான அமைச்சர்களின் வியூகம் இங்கே காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் உதவியதாக கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 55165வாக்குகளை கடந்து முன்னிலை பெற்றுள்ளார்.

அதிமுக வேட்பாளர் 20988 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 3508 வாக்குகளை பெற்று உள்ளார். தேமுதிக ஆனந்த் வெறும் 1017 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளது. இதனால் திமுக தரப்பு பிரம்மாண்ட வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக பிளானிங்

திமுக பிளானிங்

ஈரோடு கிழக்கில் ஏற்கனவே திமுக கூட்டணிதான் கடந்த தேர்தலில் வென்றதால் இங்கே எப்படியும் மீண்டும் வென்றுவிட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருந்தது. ஆனால் இந்த முறை மிகப்பெரிய அளவில் வெற்றியை பதிவு செய்ய வேண்டும். 60 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெல்ல வேண்டும் என்பதற்காக திமுக திட்டங்களை வகுத்து வந்தது. ஈரோடு கிழக்கில் 17 சதவிகிதம்தான் அங்கே கவுண்டர்கள் இருக்கிறார்கள். 36 சதவிகிதம் செங்குந்த முதலியார்கள் இருக்கிறார்கள். 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் இருக்கிறார்கள். 6 சதவிகிதம் அருந்ததியர்கள் இருக்கிறார்கள். இதில் கவுண்டர்கள் வாக்குகளை விட மற்றவர்களை சேர்த்தால் அதிக வாக்குகள் வருகிறது. முக்கியமாக செங்குந்த முதலியார்கள்தான் இங்கு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள்,

வாக்கு வங்கி

வாக்கு வங்கி

இந்த வாக்கு வங்கி கணக்கை வைத்து திமுக இங்கே திட்டங்களை வகுத்து வந்தது. இங்கே செந்தில் பாலாஜி உள்ளிட்ட 11 அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை தேர்தல் பணிக்காக இங்கே திமுக களமிறக்கி இருந்தது. இதில் ஒவ்வொருவருக்கும் 3-4 வார்டு ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கே சுமார் 35 வார்டுகள் உள்ளன. இதில் செந்தில் பாலாஜிக்கு வெள்ளாள கவுண்டர்கள் இருக்கும் வார்டுகள் கொடுக்கப்பட்டு இருந்தன. இதில் அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில் பாலாஜி, கே என் நேரு ஆகியோர் பார்த்த களபணிகள்தான் திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இவர்கள் மூன்று பேரும் கடந்த 3 வாரமாக மிக தீவிரமாக களத்தில் பணிகளை செய்து வந்திருக்கின்றனர்.

அமைச்சர்கள்

அமைச்சர்கள்

மொத்தமாக அமைச்சர்கள் அனைவருக்கும் ஆளுக்கு 4 வார்டுகளில் வேலை செய்யுங்கள், வாக்கு சதவிகிதம் 60க்கும் மேல் வர வேண்டும் என்று திமுக மேலிடம் தேர்தல் பணியாளர்களுக்கு டார்கெட் விதித்து இருந்ததாம். இதில் பெரும்பாலான திட்டங்களை வகுத்தது செந்தில் பாலாஜி, முத்துசாமி, கே என் நேரு ஆகியோர்தான். ஈரோடு கிழக்கில் 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் இருக்கிறார்கள். 6 சதவிகிதம் அருந்ததியர்கள் இருக்கிறார்கள். இதில் மொத்தமாக இருவரையும் சேர்த்து 20 சதவிகித வாக்குகளை பெற வேண்டும். செங்குந்த முதலியார்கள் வாக்குகளில் 25 சதவிகிதத்தை பெற வேண்டும். கவுண்டர்கள் வாக்குகள் 10 சதவிகித வாக்குகளை பெற வேண்டும், இதன் மூலம் 55 வாக்குகளை பெற வேண்டும் என்று திட்டம் வகுத்து செயல்பட்டு உள்ளனர்.

வீடு வீடாக

வீடு வீடாக

இதை மனதில் வைத்து இவர்கள் பணிகளை செய்து உள்ளனர். தேர்தல் பணிகளை செய்யும் ஒவ்வொரு நிர்வாகியும் குறைந்தது 100 பேரிடம் பேச வேண்டும். ஒரு வாரத்தில் 100 பேரிடம் பேசினால் 3 வாரத்தில் 3 முறை ஒரே வாக்காளரிடம் பேச முடியும் என்று இவர்கள் திட்டமிட்டு பணிகளை செய்ததாக கூறப்படுகிறது. அன்பில் மகேஷ், பொன்முடி போன்றவர்களும் இங்கே கடுமையாக தேர்தல் பணிகளை செய்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த தேர்தல் வெற்றி தொடர்பாக அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு நிகழ்ச்சி ஒன்றை நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+