ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏன் அவசரப்படுறீங்க? அவர்கிட்ட போய் கேளுங்கள்.. பட்டென சீறிய ஓபிஎஸ்.. என்னது சசிகலாவா? ட்விஸ்ட்

அதிமுக பொது வேட்பாளருக்கான பி பார்மில் கையெழுத்து போட என்னிடம் அனுப்பினால் நான் கையெழுத்து போடுவேன் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

ஈரோடு: இரட்டை இலை சின்னம் முடங்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லை. இரட்டை இலை இருக்க வேண்டும் என்பதே என் ஆசை என்று ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்,

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் எதிர்க்கட்சிகள் தரப்பில் பெரிய பிளவை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் சார்பாகவும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அவர்கள் தரப்பு களமிறக்கி உள்ளது.இரண்டு தரப்பும் போட்டியிடுவதால் ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அதிமுக சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதில் ஓ பன்னீர்செல்வம் இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். நாளை இந்த வழக்கில் முக்கிய உத்தரவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கன்ஃபார்ம்.. இரட்டை இலை சின்னம் முடக்கம்! ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை ஓபிஎஸ் அணியும் அறிவித்தது! கன்ஃபார்ம்.. இரட்டை இலை சின்னம் முடக்கம்! ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை ஓபிஎஸ் அணியும் அறிவித்தது!

சசிகலா

சசிகலா

இந்த விவகாரத்தில் சசிகலா தலையிட உள்ளதாகவும் செய்திகள் வர தொடங்கி உள்ளன. விரைவில் ஓ பன்னீர்செல்வத்தை சசிகலா சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வத்திடம் சசிகலாவை எப்போது சந்திப்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓ பன்னீர்செல்வம்.. கண்டிப்பாக சசிகலாவை சந்திப்பேன். ஏன் அவசரப்படுகிறீர்கள். கண்டிப்பாக போய் பார்ப்பேன். எப்போது பார்ப்பேன் என்று சொல்லுவேன். உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் போய் பார்ப்பேன். உறுதியாக பார்ப்பேன்.

இரட்டை இலை

இரட்டை இலை

இரட்டை இலை சின்னம் முடங்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லை. இரட்டை இலை இருக்க வேண்டும். அதிமுக சார்பாக பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். பி பார்மில் கையெழுத்து போட என்னிடம் அனுப்பினால் நான் கையெழுத்து போடுவேன். கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். தொண்டர்கள் விருப்பமும் அதுதான். அதுவே நடக்க வேண்டும். இந்த தேர்தலில் பாஜக போட்டியிடுகிறதா என்று விரைவில் அறிவிப்பு வரும். அதிமுக தொண்டர்கள், தமிழ்நாடு மக்கள், பாஜக என்று எல்லோரும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள் என்றார்.

எடப்பாடி

எடப்பாடி

இதையடுத்து எடப்பாடி பணிமனையில் பாஜகவை தவிர்த்து இருக்கிறார்களே என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், இதை என்னிடம் கேட்காதீர்கள். அவர்களிடம் போய் கேளுங்கள். அவர்கள் ஏன் பாஜகவை தவிர்த்தார்கள் என்று தெரியவில்லை. அதில் நான் கருத்து சொல்ல மாட்டேன் . அவர்களிடமே போய் கேளுங்கள், எங்களை பொறுத்தவரை நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். அதன்படியே செயல்பட்டு வருகிறோம். எங்கள் வேட்பாளருக்கு பிரகாசமான வெற்றிவாய்ப்பு உள்ளது. எங்கள் வேட்பாளர் வலிமையான வேட்பாளர். நேற்றே சொல்லிவிட்டேன்.

பேனா

பேனா

பாஜக வேட்பாளரை களமிறக்கினால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி நலனை மனதில் வைத்து செயல்படுவோம். கருணாநிதிக்கு பேனா வைப்பது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறேன். அதை பற்றிய வல்லுனர் கருத்துக்களை கேட்டு இருக்கிறேன். அந்த தகவல்கள் வந்ததும் கருத்து தெரிவிக்கிறேன். மீனவர்கள் கருத்துக்களையும் கேட்டு இருக்கிறேன். இதெல்லாம் முழுமையாக கிடைத்ததும் என் நிலைப்பாட்டை அறிவிப்பேன், என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

English summary
I will meet Sasikala for sure, very soon says O Panneerselvam ahead of Erode East by-election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X