எனக்கு ஓட்டு போட்டா பாஜக வராது.. நான்தான் வருவேன்.. “அவங்க நாடகத்தை நம்பாதீங்க”.. ஆவேசமடைந்த சீமான்!
எனக்கு ஓட்டு போடவில்லை என்றால் இனி எந்த பிரச்சனைக்கும் வராமல் ஓரமாக நின்று வேடிக்கை தான் பார்ப்போம் என சீமான் பேசியுள்ளார்.
ஈரோடு : "சீமானுக்கு ஓட்டு போட்டால் பாஜக வந்துவிடும் என்று பிரச்சாரம் செய்கின்றனர். எனக்கு ஓட்டு போட்டால் நான் தான் வருவேன். அவர்கள் நாடகம் நடத்துகின்றனர். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்." என ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நெருங்குவதையொட்டி, அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிடாத நிலையில், அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளருக்கு டஃப் ஃபைட் கொடுக்க நாம் தமிழர் கட்சி முயன்று வருகிறது.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ஈரோடு கிழக்கில் சுற்றிச் சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சீமான், ஒவ்வொரு பகுதியிலும், அந்தந்தப் பகுதி மக்களைக் கவரும் வகையில் பேசி வருகிறார்.

சீமான் பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அக்ரஹாரம் பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அங்கு நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் மேனகா நவநீதனுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய சீமான், "குஜராத் குறித்து ஆவணப்படம் வெளியிட்டதால் பிபிசி அலுவலகத்தில் ரெய்டு நடத்தி மிரட்டிப் பார்க்கிறார்கள், நானும் தான் தொடர்ந்து பேசி வருகிறேன். என் வீட்டில் ஒரு ரெய்டு போடுங்க பார்க்கலாம். அவர்கள் மிரட்டி உருட்டி பார்க்கிறார்கள்." எனப் பேசினார்.

வெளிநாட்டுக்காரர்களா வருவார்கள்?
மேலும் பேசிய சீமான், "விவசாயப் பெருமக்களே எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றால் வெளி நாட்டுக்காரர்களா வந்து எங்களுக்கு ஓட்டு போடப் போகிறார்கள். உங்களை நம்பி நிற்கிறோம். எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள். நாங்கள் ஓட்டு கேட்டு நடக்க நடக்க வாக்குக்கு ரூ.1000, ரூ.500 என ஏறுகிறது. கிடைக்கும் வரைக்கும் வசூல் செய்யுங்கள். நல்லா இருப்பீங்க.. ரொம்ப நாளா கெஞ்சுறோம், விவசாயி சின்னத்துக்கு ஒரு முறை ஓட்டு போடுங்க. நான் ஒருத்தன் தான் உங்களுக்காக நிற்கிறேன். நான் ஓட்டுக்கானவன் அல்ல நாட்டுக்கானவன்.

மறுமையில் இறைவனிடம்
நோன்பு கஞ்சி குடிக்க இஸ்லாமிய சகோதரர்கள் என்னை அழைத்தார்கள். நான் ஒரு நாள் மட்டும் இஸ்லாமிய வேடம் அணிய முடியாது. என்னால் வர முடியாது, வேண்டுமென்றால் என் வீட்டிற்கு கொடுத்து விடுங்கள் என்று கூறினேன். நான் உணவுக்கானவன் அல்ல இஸ்லாமியர்களின் உரிமைக்கானவன், நீங்கள் ஓட்டு எனக்கு போட்டாலும் போடுங்க, இல்ல திமுகவுக்கே போடுங்க. அவர்களுக்கு ஓட்டு போட்டுவிட்டு மறுமையில் நீங்கள் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும், மக்களுக்கு நல்லது நடந்து விடக் கூடாது என்று நினைக்கும் சாத்தான்கள் தான் இரண்டு கட்சிகளும்.

எனக்கு ஓட்டு போட்டா நான்தான் வருவேன்
சீமானுக்கு ஓட்டு போட்டால் பாஜக வந்துவிடும் என்று பிரச்சாரம் செய்கின்றனர். எனக்கு ஓட்டு போட்டால் நான் தான் வருவேன். அதை விடுத்து அவர்கள் நாடகம் நடத்துகின்றனர். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். விழிப்புணர்வு அற்ற சமூகத்தில் நடிப்பவனே ஆட்சிக்கு வருவான். முடிந்தால் வாக்குக்கு பணம் கொடுக்காமல் நின்று எங்களை வென்று பாருங்கள், மக்கள் நோட்டு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுகிறார்கள். ஓட்டை வாங்கிவிட்டு அவர்கள் நாட்டை விற்கிறார்கள். வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும், அரவிந்த் கெஜ்ரிவாலால் வெல்ல முடியும். சீமானால் வெல்ல முடியாதா? முடியும் உறுதியாக வெல்லுவோம், அதை உரக்கச் சொல்லுவோம்.

ஓரமாக நின்று வேடிக்கைதான் பார்ப்போம்
இந்திய பெருநிலத்தில் அதிக இளைஞர்களை கொண்ட ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. எங்களுக்கு சின்னமாக புலி சின்னம் கேட்டோம். அவர்கள் மறுத்துவிட்டனர். புலிக்கு புலியை கொடுக்க முடியாது. கடைசியாக விவசாயி சின்னத்தை கொடுத்தார்கள். ஏனென்றால் எந்த விவசாயியும் உயிரோடு இல்லை என்பதால் நமக்கு விவசாயி சின்னம் தந்தார்கள். பிரச்சனை, ஆர்ப்பாட்டம், போராட்டம் என அனைத்திற்கும் நாங்கள் வந்து நிற்க வேண்டும். வாக்கை மட்டும் பிரச்சனை கொடுக்கும் அவர்களுக்கு போடுகிறீர்கள். எனக்கு ஓட்டு போடவில்லை என்றால் இனி பிரச்சனைக்கு வராமல் ஓரமாக நின்று வேடிக்கை தான் பார்ப்போம்" எனப் பேசியுள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications