லவ் சேர காரணமே விஜய் அண்ணாதான்! எங்கள் மகளின் பெயரே "காதலுக்கு மரியாதை"! ஈரோட்டில் பூரித்த தம்பதி

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: விஜய் மீது இருக்கும் அன்பால் நானும் என் கணவரும் சேர்ந்து என் மகளுக்கு "காதலுக்கு மரியாதை" என்ற பெயரை வைத்தோம் என ஒரு தம்பதி பூரிப்புடன் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம், சரளை அருகே தவெக பொதுக் கூட்டம் தற்போது நடைபெறுகிறது. தற்போது விஜய், சரளை பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்துவிட்டார்.

TVK Vijay Erode

இந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட கூடாது என்பதற்காக 53 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 80 சதவீதம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பொதுக் கூட்டத்திற்காக 43 நிபந்தனைகளை காவல் துறை விதித்துள்ளது.

அதில் முக்கியமானது குழந்தைகள், கர்ப்பிணிகள் வரக் கூடாது என்பது. அந்த வகையில் ஈரோடு பொதுக் கூட்டத்திற்கு குழந்தையுடன் வந்த ஒரு தொண்டரை காவல் துறையினர் அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டனர்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு, இந்த கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு கூட்டம், புதுவை மக்கள் சந்திப்பு கூட்டங்களிலும் குழந்தைகள், கர்ப்பிணிகள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு தனது மகளுடன் வந்த ஒரு தம்பதி கூறுகையில், எங்கள் ஈரோடு மாவட்டத்திற்கு வரும் விஜய்,பெருந்துறை சிப்காட் குறித்து பேச வேண்டும்.

அழிந்து வரும் விவசாயம் குறித்தும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும் அவர் நிச்சயம் பேசி ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் காதல் சேர காரணமே விஜய் அண்ணாதான். அவருடைய காதலுக்கு மரியாதை படத்தை பார்த்துவிட்டு என் மகளுக்கு அந்த படத்தின் பெயரை வைத்துவிட்டோம்.

பிறகுதான் அவளுக்கு வேறு பெயரை சூட்டினோம். எனக்கும் என் கணவருக்கு ஒத்து போகும் விஷயமே விஜய் அண்ணாதான் என அவர்கள் பூரிப்புடன் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+