அவரை "வீக்காக்க" வேண்டும்! டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பும் அண்ணாமலை! பாஜக கேம்! திரும்பும் எடப்பாடி?
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அண்ணாமலை மிகவும் கவனமாக செயல்பட்டுக்கு கொண்டு இருக்கிறார். கள நிலவரம் எப்படி இருக்கிறது என்று அண்ணாமலை இதில் ரிப்போர்ட் கொடுப்பார். ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியிட்டால், பாஜக சார்பாக தான் போட்டியிட்டால் நிலவரம் எப்படி இருக்கும் என்று அவர் டெல்லிக்கு ரிப்போர்ட் அளிக்க வாய்ப்பு உள்ளது என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு பக்கம் போட்டியிடுகிறது. இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வமும் தனது தரப்பு அதிமுக வேட்பாளரை களமிறக்க போவதாக கூறி உள்ளார். அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் அவர் தரப்பு அதிமுக வேட்பாளரை களமிறக்க உள்ளார்.
இதற்காக அவர் விருப்பமனு வாங்க தொடங்கி உள்ளார். இங்கே போட்டியிடுவது தொடர்பாக பாஜகவும் ஆலோசனை செய்ய தொடங்கி உள்ளது. இதனால் ஈரோடு கிழக்கில் தற்போது குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இங்கே பாஜகவின் திட்டம் என்னவாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூபிற்கு பேட்டி அளித்துள்ளார்.

சின்னம்
அவர் அளித்த பேட்டியில், 62 எம்எல்ஏக்கள் எடப்பாடியிடம்தான் இருக்கிறார்கள். எடப்பாடிக்கு கட்சியில் சப்போர்ட் இருக்கிறது. அதனால் எடப்பாடி இப்போது பாஜகவை கழற்றிவிட துணிந்துவிட்டார். முன்பு ஓபிஎஸ்ஸை கழற்றிவிட்டார். இப்போது பாஜகவை கழற்றிவிட தொடங்கிவிட்டார். அதனால்தான் ஈரோடு கிழக்கில் வேட்பாளரை இறக்க பார்க்கிறார். பாஜக இறங்கினாலும் பரவாயில்லை என்று எடப்பாடி தனது ஆளை களமிறக்க பார்க்கிறார். இதை நாம் முன்பே கணித்ததுதான். சின்னமே கிடைக்கவில்லை என்றாலும் நின்றுதான் தீர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி இருக்கிறார். இதில் யாரையும் குறைத்து மதிப்பிட கூடாது.

முதல்வர் வேட்பாளர்
பாஜக அங்கே போட்டியிட்டால் ஓபிஎஸ், டிடிவி போன்றவர்கள் பாஜகவை ஆதரிக்க வாய்ப்பு உள்ளது. ஈரோடு கிழக்கில் சிறப்பாக செயல்பட்டால் தான் 2026ல் முதல்வர் வேட்பாளர் ஆக முடியும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வமும் இதைத்தான் நினைக்கிறார். இப்போது ஸ்டாலினை எதிர்க்க நல்ல முதல்வர் வேட்பாளர் எதிர் தரப்பில் இல்லை. இந்த தேர்தலில் அடித்து ஆடுவதன் மூலம் நாங்கள் ஸ்டாலினுக்கு எதிராக 2026ல் முதல்வர் வேட்பாளர் ஆக முடியும் என்பதை காட்ட எடப்பாடி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் நினைக்கிறார்கள். ஸ்டாலினை எதிர்க்க கூடிய தகுதி தங்களுக்கு உள்ளது என்பதை காட்ட இவர்கள் முயன்று கொண்டு இருக்கிறார்கள். தற்போது ஸ்டாலின் vs மற்றவர்கள் என்ற நிலைதான் உள்ளது. அந்த இடத்தில் தங்களின் பெயர் வர வேண்டும் என்று எடப்பாடி, ஓபிஎஸ் முயன்று கொண்டு இருக்கின்றனர்.

அண்ணாமலை கவனமா
இந்த விவகாரத்தில் அண்ணாமலை மிகவும் கவனமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார். கள நிலவரம் எப்படி இருக்கிறது என்று அண்ணாமலை இதில் ரிப்போர்ட் கொடுப்பார். ஈரோடு கிழக்கில் பாஜக சார்பாக தான் போட்டியிட்டால் நிலவரம் எப்படி இருக்கும் என்று அவர் ரிப்போர்ட் அளிக்க வாய்ப்பு உள்ளது. அதில் டெல்லி முடிவு எடுக்கும். அண்ணாமலையே போட்டியிடுவது பற்றி தனி ஆளாக முடிவு எடுக்க மாட்டார். டெல்லி எடுக்கும் முடிவுதான் இறுதியானது. இன்னொரு பக்கம் டெல்லியே ரிப்போர்ட் இல்லாமல் நேரடியாக முடிவு எடுக்க முடியும். அங்கே வெள்ளாள கவுண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாக்குகளை பாஜக அள்ளும் வாய்ப்புகள் உள்ளன. எடப்பாடியை வீக்காகினால்தான் அண்ணாமலை வளர முடியும்.

வெள்ளாள கவுண்டர்கள்
வெள்ளாள கவுண்டர்கள் இருக்கும் ஒரு பூத்தில் அண்ணாமலை - எடப்பாடி தரப்பு மோதுகிறது என்று வைத்துக்கொள்வோம். இங்கே செந்தில் பாலாஜியும் மூக்கை நுழைப்பார். இங்கே வெள்ளாள கவுண்டர்கள் வாக்குகளை அனைத்தையும் மீறி அண்ணாமலை பெற வேண்டும். அப்போதுதான் அவர் சிறந்த தலைவர் என்று கருதப்படுவார். எடப்பாடி, செந்தில் பாலாஜி ஆகியோர் மீறி ஈரோடு கிழக்கில் எடப்பாடி சாதித்து காட்ட வேண்டும். அப்படி செய்தால்தான் அவர் பெரிய தலைவர். எடப்பாடியை வீக் செய்து, அங்கு நின்று காட்டினால்தான் அண்ணாமலை நிரூபிக்க முடியும், என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications