நேரம் பார்த்து.. எடப்பாடிக்கு டெல்லி வசமாக வைத்த 2 செக்.. கூட்டணி வைப்பதை தவிர வேறு வழியில்லை?
ஈரோடு: ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கத்திற்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதிமுகவின் இரட்டை இலை வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த ரெய்டு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி உறவினர் ராமலிங்கம் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி உறவினர் ராமலிங்கத்தின் சென்னை, ஈரோடு, பெங்களூர் வீடுகளில் ஐடி சோதனை நடைபெற்று வருகிறது

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக புகழேந்தி அளித்த மனுவை விரைவாக விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில் விரைவில் தீர்வு வழங்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில்தான் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்கும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வருகின்றன.
தேர்தல் ஆணையம் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் முடங்கும் வாய்ப்புகள் நிலை ஏற்பட்டு உள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பற்றி முடிவெடுக்கும் முன் ஓ பன்னீர்செல்வத்திடம் கருத்து கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லி உள்ளது. எடப்பாடிக்கு இது கூடுதல் சிக்கல் ஆகி உள்ளது.
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்தை நீக்கிய பொதுக்குழுவே சட்டத்தை திருத்தி செய்யப்பட்ட பொதுக்குழுதான். அவரை நீக்க வேண்டும் என்று பொதுக்குழு கூடும் விதிகளை கூட மாற்றினார்கள். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்பட்டது செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் கூறுகிறார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் தேர்தல் ஆணையம் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அப்போது எடப்பாடி பாஜகவோடு நெருக்கமாக இருந்தார். இப்போது இல்லை. இனி இவர்கள் சேர்வார்களா இல்லையா என்று தெரியவில்லை. தங்களுடன் கூட்டணி வைக்க அதிமுகவை பாஜக நெருக்கி வருவதாக கூறப்படுகிறது.
விஜய் - அதிமுக கூட்டணி வைக்க கூடாது. அப்படி வைத்தால் நம்முடைய எதிர்காலம் போய்விடும் என்பதால் விஜய் கூட்டணிக்கு பதிலாக தங்களுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்று பாஜக நெருக்கடி தந்து வருகிறதாம். விஜய் உடன் எடப்பாடி சேர்ந்தால் அங்கே பாஜக வர வாய்ப்பு இல்லை. இதனால் எடப்பாடிக்கு கால் கட்டு போட பாஜக இரட்டை இலை சின்னத்தில் கை வைக்கலாம். தேர்தல் ஆணையத்தை வைத்து பாஜக செக் வைக்கலாம். இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. எளிதாக முடிய வேண்டிய விஷயம்.. முடிந்துவிட்டது என்று நினைத்த விஷயம் மீண்டும் பெரிதாகி உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கத்திற்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
அதிமுகவின் இரட்டை இலை வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த ரெய்டு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கூட்டணிக்கு நெருக்கடி - இரட்டை இலைக்கு சிக்கல் .. இல்லையென்றால் ரெய்டு என்ற கடுமையான சிக்கலுக்கு எடப்பாடி உள்ளாகி இருக்கிறாரோ என்ற வாதம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
-
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி












Click it and Unblock the Notifications