ஒதுக்கிட்டாங்களே.. கூப்பிட கூட இல்லையே.. பாஜகவால் வருத்தத்தில் ஓ பன்னீர்செல்வம்? என்ன நடந்தது?

பாஜக ஆதரவு எங்கே எடப்பாடிக்கு கிடைத்துவிட்டது என்று கேள்வி எழுந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தமிழ்நாடு தேர்தல் களத்தில் வெப்பத்தை கூட்டி உள்ள நிலையிலும் கூட ஓ பன்னீர்செல்வம் பெரிதாக வெளியே வராமல் அமைதியாக இருக்கிறார். பாஜக தரப்பு தனக்கு உரிய சப்போர்ட்டை வழங்கவில்லை என்று ஓ பன்னீர்செல்வம் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றும் ஓ பன்னீர்செல்வத்தை அப்செட் ஆக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பாஜக உடனான உறவு குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும் என்று வெளிப்படையாக கூறினார். அதில், அதிமுகதான் இந்த இடைத்தேர்தலில் வெல்ல போகிறது.

மக்களுக்கு அதிகம் செய்தது நாங்கள்தான். திமுக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இடைத்தேர்தல் வெற்றி திமுகவிற்கு ஏமாற்றம் கொடுக்கும்.

அதிமுக கட்சி

அதிமுக கட்சி

இன்றைய சூழ்நிலையில் அதிமுக தான் பல கட்சிகளை தாங்கி பிடித்து வருகிறது. யாரை நம்பியும் அதிமுக இல்லை. அதிமுகவுக்கு யாரும் உதவவில்லை, அதிமுக தான் பிற கட்சிகளுக்கு உதவுகிறது. மேலும் அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? தற்போது பாஜக எங்கள் கூட்டணியில் தான் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்போம். எங்களின் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்றார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடியின் இந்த ஸ்டேட்மெண்டிற்கு முன்பாகவே அவருடன் பாஜக நெருக்கமாக பழக தொடங்கிவிட்டது.

அண்ணாமலை

அண்ணாமலை

முன்னதாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சட்டபூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும், இடைக்காலப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கும், பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வமிற்கும், நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறி உள்ளார். அதாவது எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்றும், ஓபிஎஸ்ஸை வெறும் அண்ணன் என்றும் அண்ணாமலை அழைத்துள்ளார். இதன் மூலம் பாஜக ஆதரவு எங்கே எடப்பாடிக்கு கிடைத்துவிட்டது என்று கேள்வி எழுந்துள்ளது.

நெருக்கம் அதிகரித்து வருகிறது

நெருக்கம் அதிகரித்து வருகிறது

இப்படி பாஜக அதிமுக இடையே திடீரென நெருக்கம் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் பெரிதாக வெளியே வராமல் அமைதியாக இருக்கிறார். பாஜகவுடன் நெருக்கமாக இருந்தும், பாஜகவிடம் மிகவும் நட்பாக இருந்தும் கூட பாஜக தரப்பு தனக்கு உரிய சப்போர்ட்டை வழங்கவில்லை என்று ஓ பன்னீர்செல்வம் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலை தன்னை வெறும் அண்ணன் என்று அழைத்ததை தாண்டி சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றும் ஓ பன்னீர்செல்வத்தை அப்செட் ஆக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அழைக்கவில்லை

அழைக்கவில்லை

சமீபத்தில் நாடு முழுக்க மொத்தம் 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னையில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது இந்த விழாவிற்கு பாஜக கூட்டணியில் உள்ள தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதிமுக சார்பாக எடப்பாடி அணியை சேர்ந்த ஜெயக்குமார் இதில் கலந்து கொண்டார். ஆனால் ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு அழைப்பு செல்லவில்லை. பாஜக இப்படி தன்னை அழைக்காமல் விட்டதால் ஓ பன்னீர்செல்வம் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

வாழ்த்து

வாழ்த்து

இத்தனைக்கும் சிபிஆர் பெயர் ஆளுநர் பட்டியலில் இடம்பெற்றதும் முதலில் வாழ்த்தியது ஓபிஎஸ்தான். ஓ பன்னீர்செல்வம் தமிழ்நாட்டைச் சேர்ந்த C.P.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரது பணி சிறக்க எனது நல்வாழ்த்துகள், என்று கூறியுள்ளார். பாஜகவினரே இன்னும் சிபி ராதாகிருஷ்னனுக்கு தனது வாழ்த்தை தெரிவிக்க நேரம் எடுத்தனர். பல பாஜக தலைவர்கள் இன்னும் சிபிஆருக்கு வாழ்த்து சொல்லும் முன் ஓ பன்னீர்செல்வம் முதல் ஆளாக வாழ்த்து சொல்லி இருக்கிறார். பாஜகவுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை காட்டிக்கொள்ளும் விதமாக ஓ பன்னீர்செல்வம் இப்படி போஸ்ட் செய்துள்ளார். ஆனால் அவரை பாஜக ஒதுக்கியதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. பாஜகவின் இந்த நிலைப்பட்டால் ஓ பன்னீர்செல்வம் தரப்பு கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+