“அருந்ததியர் தெலுங்கர்”.. வாயை விட்ட சீமான்! ஈரோடு கிழக்கு தேர்தலில் நாம் தமிழருக்கு நெகட்டிவ் ஆனதா?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர்களை ஆந்திராவில் இருந்து மலம் அள்ள வந்தவர்கள் என்று பேசினார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அதில் 3 வது இடம்பிடித்து இருக்கும் நாம் தமிழர் கட்சி இதுவரை 5,000 வாக்குகளை கூட தாண்டவில்லை. அருந்ததியர்களை ஆந்திராவில் இருந்து மலம் அள்ள வந்தவர்கள் என்று பிரச்சாரத்தில் சீமான் பேசியதும் இதற்கு ஒரு காரணமாக இருக்குமோ என்று கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று வாக்குகள் எண்ணும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இதுவரை வெளியான முடிவுகளின்படி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுகவை வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை விட சுமார் 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

நாம் தமிழருக்கு ஏமாற்றம்
மூன்றாவது இடத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா இதுவரை 4 ஆயிரம் வாக்குகளை கூட நெருங்கவில்லை. அதிமுக வேட்பாளரை விட பல மடங்கு குறைவான வாக்குகளை பெற்று இருக்கிறார். இந்த இடைத்தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று தமிழ்நாட்டின் முன்னணி அரசியல் கட்சியாக நாம் தமிழரை காட்டிக்கொள்ள நினைத்த சீமானுக்கு இந்த முடிவுகள் ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறது.

2021ல் நாம் தமிழர் வாக்குகள்
இதற்கு முக்கிய காரணம் கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கோமதி 11 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றார். அப்போது மக்கள் நீதி மய்யமும் தனித்து போட்டியிட்டது. இம்முறை மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்ததால், திமுக எதிர்ப்பு வாக்குகள் நாம் தமிழருக்கு விழும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

குறைந்த வாக்குகள்
ஆனால், தற்போது வெளியான வாக்கு எண்ணிக்கை சுற்று முடிவுகள்படி 2021 ஆம் ஆண்டில் பெற்ற வாக்குகளை நாம் தமிழர் பெறுவதே சந்தேகம் என்று கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் செங்குந்த முதலியாரை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தியும் நாம் தமிழரால் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற முடியவில்லை.

கைகொடுக்காத ஜாதி வாக்குகள்
அதே நேரம் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக வேட்பாளர்கள் எல்லாம் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள். எனவே ஜாதி அடிப்படையிலான வாக்குகளும் சீமானுக்கு கைகொடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இது அல்லாமல், காங்கிரஸுக்கு அனுதாப வாக்குகள் விழுந்ததாலும், பெரிய கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுத்ததாலும் நாம் தமிழருக்கு வாக்குகள் விழவில்லை என்ற பேச்சுக்களும் எழுந்தன.

சீமான் சர்ச்சை பேச்சு
ஆனால், வாக்காளர்களும் பரிசுப்பொருட்கள், பணம் எல்லாம் கடந்த தேர்தலிலும் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வந்தன. எனவே இம்முறை நாம் தமிழரின் இந்த வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுவது சீமானின் பேச்சுதான் என்கின்றன அரசியல் வட்டாரங்கள். கடந்த சில நாட்களுக்கு முன் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் சீமான் ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திராவிலிருந்து வந்த அருந்ததியர்கள்
அதில், முதலியார்களை பற்றி உயர்வாக பேசிய சீமான் அருந்ததியர்கள் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளானது. "தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த என் ஆதி தமிழ் குடிகளிடம் எங்கள் ஆட்சியிலும் இதேபோல் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று விஜயநகர மன்னர்கள் கேட்டபோது மறுத்துவிட்டார்கள். எனவே வேறு வழியின்றி ஆந்திராவில் இருந்து அருந்ததியர்களை அழைத்து வந்தார்கள்." என்று பேசினார்.

கொந்தளித்த அருந்ததியர்கள்
அருந்ததியர்கள் குறித்த சீமானின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்தன. நாம் தமிழர் கட்சியினர் ஈரோட்டில் பிரச்சாரம் செய்ய சென்ற இடமெல்லாம் அருந்ததியர்கள் அவர்களுக்கு எதிராக நின்றனர். குறிப்பாக அருந்ததியர்கள் வசிக்கும் பகுதிக்கு உள்ளேயே நாம் தமிழர் கட்சியினரை அனுமதிவில்லை. இதனால், கடந்த 17 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது.

சீமான், உருவ பொம்மை எரிப்பு
இதற்கிடையே சீமானை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் அவரது கொடும்பாவியை எரிக்கும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தேனி, பழனி, மதுரை, இராமநாதபுரம், நாமக்கல், திருநெல்வேலி, ஈரோடு என தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சீமானின் உருவ பொம்மையை எரித்து தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சீமான் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications