பெண்கள் பெற்றோர் சம்மதத்துடன் வாழ்க்கையை தொடங்கணும்! கொங்கு கலைக் குழு கே.கே.சி.பாலு புது விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: பெண்கள் பெற்றோர் சம்மதத்துடன் தான் வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பதற்காகவும் தவறான இணையை தேர்வு செய்துவிடக் கூடாது என்பதற்காகவும் தான் வள்ளிக்கும்மியாட்டத்தில் தாம் பெண்களிடம் உறுதிமொழி வாங்கியதாக கூறியிருக்கிறார் கொங்கு கலைக் குழு கே.கே.சி.பாலு.

கொங்கு பகுதியில் பாரம்பரிய கலையாக கருதப்படும் வள்ளிக்கும்மியாட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களிடம் கவுண்ட வீட்டு பையனையே கட்டுவோம் என்ற உறுதிமொழியை வாங்கியதன் மூலம் சர்ச்சையில் சிக்கியிருக்கிறா கே.கே.சி.பாலு. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில பொருளாளராக உள்ள இவர் கொங்கு கலைக்குழு என்ற பெயரில் வள்ளிக்கும்மியாட்ட நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து வருகிறார்.

Kongu kalai kuzhu KKC Balu explain, Girls should start life with parental consent

கடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் திமுக கூட்டணியில் கொமதேக வேட்பாளராக களமிறங்கி தோல்வியை தழுவியவர் கே.கே.சி.பாலு. பிஇ படித்திருந்தாலும் சமுதாய ரீதியான பாசமும் பற்றும் அதிகமிக்கவர். வள்ளிகும்மியாட்டத்தில் தாம் ஏன் பெண்களிடம் உறுதிமொழி வாங்கினேன் என்ற விளக்கத்தை செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ளார். அதில் பெண்கள் பெற்றோர் சம்மதத்துடன் தான் வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்றும் தவறான இணையை தேர்வு செய்துவிடக் கூடாது எனவும் பெண்களிடம் உத்தரவாதம் வாங்கியதாக தெரிவித்தார்.

பெண்களின் பெற்றோர் சம்மதத்துடனே இந்த உறுதிமொழியை தாம் வங்கியதாகவும் யாரையும் நிர்பந்தப் படுத்தி தாம் உறுதிமொழி வாங்கவில்லை எனவும் கே.கே.சி. பாலு புது விளக்கம் அளித்துள்ளார். பெண்களை பாதுகாப்பாக பத்திரமாக இருங்க என்ற நோக்கில் தான் அறிவுரை கூறினேனே தவிர யாரையும் வெட்டுங்க, குத்துங்க என்றெல்லாம் தாம் பேசவில்லை என்றார். மொத்தத்தில் வள்ளிக்கும்மியாட்டத்தில் கவுண்ட வீட்டு பையனையே கட்டுவோம் என்ற உறுதிமொழி வாங்கியதில் எந்த தவறும் இல்லை என்கிற வகையில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இதனிடையே கே.கே.சி. பாலு பொருளாளராக இருக்கும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி தற்போது திமுக கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+