அசைவே இல்லை.. உடம்பெல்லாம் ரத்தம்.. விடிகாலையில் அதிர்ந்து போன விவசாயி.. பதுங்கிய சிறுத்தைக்கு வலை

: பசுவை கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் தேடி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: தாளவாடி அருகே சிறுத்தை தாக்கியதில் பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.. இதையடுத்து, பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended Video

    அசைவே இல்லை.. உடம்பெல்லாம் ரத்தம்.. விடிகாலையில் அதிர்ந்து போன விவசாயி.. பதுங்கிய சிறுத்தைக்கு வலை

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டது தாளவாடி வனச்சரகம்.. இந்த வனப்பகுதியை சுற்றிலும், தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம், மல்குத்திபுரம் போன்ற பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகிறார்கள்.

    கடந்த 2 வருடத்திற்கு முன்பு வனப்பகுதியில் இருந்து ஒரு சிறுத்தை இங்கு வந்துவிட்டது.. இங்குள்ள ஒரு கல்குவாரியில் பதுங்கி கொண்டு கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

     விவசாயிகள்

    விவசாயிகள்

    இதனால் அச்சமடைந்த விவசாயிகள் வனத்துறையினரிடம் தங்கள் புகார்களை தெரிவித்தனர்.. இதையடுத்து வனத்துறை சார்பில் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் சிறுத்தை அந்த கூண்டுகளில் சிக்கவே இல்லை.. கூண்டு வைக்காத பகுதிகளில் இருந்து தப்பித்து, கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.

     மாட்டு கொட்டகை

    மாட்டு கொட்டகை

    இந்நிலையில் தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்தவர் மானாவாரி விவசாயி ரங்கசாமி.. 45 வயதாகிறது.. இவர் 7 மாடுகளை வளர்த்து வருகிறார்.. இவரது வீடு மற்றும் மாட்டு கொட்டகை ஊரை ஒட்டியே உள்ளது.. வழக்கம்போல் மாடுகளை மாட்டு கொட்டகையில் கட்டிவைத்து விட்டு, நேற்றிரவு தூங்க சென்று விட்டார்...

     அதிர்ச்சி

    அதிர்ச்சி

    விடிகாலையில் எழுந்து பார்த்தபோது தன்னுடைய பசுமாட்டின் கன்று அசைவற்று உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ந்தார்.. அந்த பசுமாட்டின் உடல் முழுதும் ரத்த காயங்கள் கிடந்தன.. இதைபற்றி உடனடியாக தாளவாடி வனத்துறைக்கு அந்த பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.

     சிறுத்தை

    சிறுத்தை

    சம்பவ இடத்துக்கு வந்த தாளவாடி வனத்துறையினர், கால்தடயங்களை ஆய்வு செய்தனர். இதில் சிறுத்தை தாக்கி பசுகன்று இறந்தது உறுதி செய்தனர்... தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடிவரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கல்குவாரி அருகே கூண்டு வைக்கப்பட்டு உள்ளது... இருந்தாலும் கூண்டில் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வருகிறது..!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+