தீபாவளிக்கு பிளான் எதுவும் இல்லை.. தானாகவே விற்பனை அதிகம் நடக்குது.. மது விலக்கு அமைச்சர் முத்துசாமி
ஈரோடு: தீபாவளிக்கு பிளான் எதுவும் பண்ணவில்லை என்றும் தீபாவளி பண்டிகை போன்ற கால கட்டங்களில் எல்லாவற்றிலுமே கூடுதல் வியாபாரம் ஆகிறது, தடுப்பதும் கடினம் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோட்டில் மதுவிலக்கு அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: - தீபாவளி பண்டிகை போன்ற கால கட்டங்களில் எல்லாவற்றிலுமே கூடுதல் வியாபாரம் ஆகிறது. நாங்கள் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. தானாக நடக்கிறது. தடுப்பதும் கடினம். இதற்கு எப்படி பதில் சொல்வது என தெரியவில்லை. இதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று நாம் நினைக்க முடியாது. தீபாவளி நேரத்தில் என்ஜாய்மண்டிற்காக அந்த மாதிரி பண்ணுகிறார்கள் இருந்தாலும் எங்களின் வேண்டுகோள்..

அரசின் சார்பாக இது எல்லாம் தவிர்க்க வேண்டும் குறைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பமாக மக்களுக்கு நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். கவுன்சிலிங் போன்ற நிறைய டீம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மது விற்பனையை தவிர்ப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறோம். வியாபாரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட கிடையாது.
அதற்காக ஒரு நேரத்திலும் யாரும் பேசியது கிடையது. இந்த பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கான எதுவும் திட்டங்கள் முடியுமா என்பது குறித்துதான் நாங்கள் பார்க்கிறோம். டெட்ரா பேக் பொறுத்தவரை மற்ற மாநிலங்களில் உள்ளது. அதில் சில நன்மைகள் விவசாயிகளுக்கு உள்ளது. எனவே அதைப்பற்றி ஆய்வு அறிக்கை கொடுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மிக விரைவில் அறிவிப்பு வெளிவரும்.
மதுக்கடைகளை மூட வேண்டும் என வேல்முருகன் கூறியது பற்றி கேட்கிறீர்கள். மதுக்கடைகள் படிப்படியாக குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். இரண்டு பக்கமும் பேலன்ஸ் பண்ணி கொண்டு போக வேண்டியுள்ளது. இந்த பழக்கத்தை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. எனவே குடிப்பழக்கம் உள்ளவர்களை மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை புதிதாக செய்து கொண்டு இருக்கிறோம். அது வெற்றி பெறும் போது இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்.
முழு நேரமும் டாஸ்மாக் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமாக எதாவது நடந்தால் மிகப்பெரும் தப்பு.. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டெட்ரோ பேக் விவகாரத்தை பொறுத்தவரை குழு அறிக்கையை ஓரளவு கொடுத்து உள்ளது. முழு அறிக்கையையும் கொடுத்த பிறகு நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டு அதற்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications