உள்ளாட்சி தேர்தலில் பெரிய அடி.. தகிக்கும் தலைவர்கள்.. வலுக்கும் கோஷ்டி பூசல்.. ஆட்டம் காணும் அதிமுக
ஈரோடு மாவட்டத்தில் வெடித்துள்ளது அதிமுக கோஷ்டி பூசல்
ஈரோடு: போற போக்கை பார்த்தால்.. ஈரோடு மாவட்ட அதிமுகவில் ஏகப்பட்ட பிளவுகள் ஏற்பட்டு விடும் என்று தெரிகிறது.. உள்கட்சி பூசலும், உள்ளடி வேலைகளும் கொங்கு மண்டலத்தை ஆட்டம் காண வைத்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. போன வருஷத்தில், இந்த 14 ஒன்றியங்களுமே அதிமுக வசம் இருந்து வந்தது.. இதற்கு காரணம் கொங்கு மண்டலம் என்றாலே அதிமுகவின் கோட்டை என்ற அசைக்க முடியாத நம்பிக்கைதான்.
ஆனால், நாளுக்கு நாள் இந்த நம்பிக்கை தகர்ந்து விட்டது.. ஏகப்பட்ட கோஷ்டி மோதல்கள், உட்பூசல்கள் தலைவிரித்தாட ஆரம்பித்துவிட்டன. அதற்கான அறுவடையைதான் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அறுவடை செய்திருக்கிறது இந்த கட்சி.

ஒன்றியம்
4 ஊராட்சி ஒன்றியங்களில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. டிஎன் பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில், தலைவர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றாலும், இந்த ஒன்றியத்தையும் திமுக அசால்ட்டாக கைப்பற்றும் என்றே கணிக்கப்படுகிறது.

கருப்பணன்
அப்படியானால் ஈரோடு அதிமுகவின் நிலைதான் என்ன? இந்த மாவட்டத்தை பொறுத்தவரை அமைச்சர்களாக செங்கோட்டையன், கருப்பணன் உள்ளனர்.. இவர்களை தவிர 6 அதிமுக எம்எல்ஏக்களும் உள்ளனர்.. இவ்வளவு பேர் இருந்தும், ஏன் அமோக வெற்றியை இந்த முறை பெற முடியாமல் போனது? இதற்கு பெருமளவு சொல்லப்படும் காரணம் கட்சியை வெற்றி பெற செய்ய மாவட்ட அமைச்சர்களே எந்த நடவடிக்கையும் பெரிசாக செய்யவில்லை என்கிறார்கள்.

புகார்
அது மட்டுமல்ல, கட்சிக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு ஆதரவாக அமைச்சர் கருப்பணன் செயல்பட்டதாகவும் மாவட்ட அதிமுக தரப்பிலேயே ஒரு புகார் எழுந்துள்ளது. அதாவது அதிமுக மீது அதிருப்தியில் இருந்த 4 பேர், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

யூனியன் தலைவர்
இவர்களை யூனியன் தலைவராக்க அமைச்சர் கருப்பணன் கடுமையாக முயற்சித்தும், அதனை தன் முயற்சியால் தவிடுபொடியாக்கி உள்ளாராம் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம். இதன்விளைவாகவே, அதிமுகவை சேர்ந்த 7வது வார்டு உறுப்பினர் சாந்தி என்பவரை ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்ய வைத்ததாகவும் கூறப்படுகிறது.

வியூகங்கள்
தோப்பு வெங்கடாசலத்தை பொறுத்தவரை, கட்சியின் சீனியர்.. எம்பி தேர்தலுக்கு பிறகு, இவர் வேறு கட்சிக்கு தாவ போகிறார் என்றெல்லாம் செய்திகள் பரபரத்தன. ஆனால் இந்த எல்லா வியூகங்களும் தவிடு பொடியாகின. இன்னும் சொல்ல போனால், நடந்து முடிந்த எம்பி தேர்தலில் முடிவினால்தான், தோப்பு வெங்கடாச்சலம் தரப்பு உற்சாகமாகவே உள்ளதாக கருதப்பட்டது.

வாக்கு சதவீதம்
கோபிசெட்டிபாளையம், பவானி தொகுதியைவிட, பெருந்துறை தொகுதியில் திமுகவின் வாக்குகள் குறைவாக பதிவாகி இருந்ததற்கு காரணம் தோப்பு வெங்கடாசலத்தின் கடுமையான உழைப்புதான்.. இதுவரை தொகுதிக்குள் செய்த நலத்திட்டங்கள், மக்களிடம் பழகும்முறை, உள்ளிட்டவைகளால்தான் பெருந்துறையின் பெரும்பாலான வாக்கு சதவீதத்தை தன்னிடம் தக்க வைத்து கொள்ள முடிந்ததாக அப்போதே கணிக்கப்பட்டது.

முதல்வர் பழனிசாமி
இப்போது உள்ளாட்சி தேர்தலிலும் தோப்பு வெங்கடாசலம் செல்வாக்கு பெற்றுவிடக்கூடாது என்று மாவட்ட அமைச்சர் தரப்பிலேயே உள்ளடி வேலை பார்ப்பதாகவும், அதனால்தான் கட்சிக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட்டவரை யூனியன் தலைவராக கொண்டுவர முயற்சிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது சம்பந்தமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் அளிக்க தோப்பு வெங்கடாச்சலம் அணியினர் முடிவு செய்துள்ளனர்.

சறுக்கல்?
அது மட்டுமல்ல.. மாவட்ட அமைச்சர் தரப்பு தொடர்ந்து இவ்வாறு கட்சிக்கு எதிரான காரியத்தில் தொடர்ந்து ஈடுபட்டால், கொங்கு மண்டலத்தில் அதிமுக செல்வாக்கை மேலும் இழக்கும் என்றும், அது வரும் சட்ட மன்ற தேர்தலில் பெரும் சறுக்கலாக அமையும் என்றும் மாவட்ட நிர்வாகிகளே முணுமுணுக்கிறார்களாம்.

கோஷ்டி பூசல்
ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து கருப்பணனை நீக்க வேண்டும் என்றும், அவ்வாறு நீக்காவிட்டால், சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் அதிமுக ஒரு சீட்கூட வாங்க முடியாது என்றும் தோப்பு வெங்கடாசலத்தின் ஆதரவாளர்கள் பகிரங்கமாகவே குரல் எழுப்ப தொடங்கி விட்டனராம்.. அன்று புகைந்து கொண்டிருந்த கோஷ்டி பூசல்.. இன்னும் சில தினங்களில் வெடித்து பூதாகரமாக கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications