Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திம்பம் மலைப்பாதை.. இரவு நேர போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும்.. சென்னை ஐகோர்ட் திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாகச் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு விதித்த உத்தரவைத் திரும்பப் பெற அனுமதிக்க முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலைகளில் ஒன்று ஈரோடு சத்தியமங்கலத்தில் அமைந்துள்ள திம்பம் மலைப்பாதை. இரு மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் சரக்கு போக்குவரத்தில் இந்த சாலை முக்கிய பங்கு வகிக்கிறது.

இப்பகுதியில் தான் 1,455 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இரவு நேரங்களிலும் விலங்குகள் சாலையைக் கடக்கும் போது, செல்லும் வாகனங்களில் எதிர்பாராதவிதமாக அடிபட்டு உயிரிழந்து வருகின்றன.

 வழக்கு

வழக்கு

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இதுபோன்ற நிகழ்வுகள் காரணமாகச் சிறுத்தை, யானை, மான்கள் உள்பட 155 வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன. இந்தச் சூழலில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள திம்பம் மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்குத் தடை செய்ய வேண்டும் என்ற ஈரோடு மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்பாகச் சொக்கலிங்கம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 தடை

தடை

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இச்சாலையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்குத் தடை விதித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவைப் பிப்ரவரி 10ம் தேதி முதல் அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்க்கக் கோரி பவானிசாகர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. - பி.எல்.சுந்தரம் தரப்பில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

 மாற்றுங்கள்

மாற்றுங்கள்

தடை உத்தரவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் எம்.எல்.ஏ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாகன போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு விதித்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசுத் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவு மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்டது எனவும், அதை அமல்படுத்தும்படி மட்டுமே நீதிமன்றம் உத்தரவிட்டதாகத் தெரிவித்த நீதிபதிகள், சரணாலயத்தில் உள்ள கிராமங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் அல்லது அதைப் புலிகள் சரணாலயம் அல்ல என அறிவிக்க வேண்டும் என்றனர்.

 மேல்மட்ட சாலை

மேல்மட்ட சாலை

டேராடூன் - ஹரித்வார் இடையில் உள்ள சாலையில் யானைகள் கடப்பதால் விபத்துகளைத் தவிர்க்க மேல்மட்ட சாலை அமைக்கப்பட்டது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அதுபோல மேல்மட்ட சாலை அமைக்கலாம் எனத் தெரிவித்தனர். இரவு நேரப் போக்குவரத்து தடை உத்தரவைத் திரும்பப் பெற அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த நீதிபதிகள், மேலும் வாகன போக்குவரத்து தடை அமலில் உள்ள நேரத்தில் பள்ளிகள் ஏதும் செயல்படுவதில்லை என்று தெரிவித்தனர். மாற்று வழித்தடத்துக்கு ஏதும் திட்டம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவுக்குப் பதிலளிக்கும்படி இடையீட்டு மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+