செங்கோட்டையன் அண்ணன் போல் நிறைய பேர் தவெகவுக்கு வருவாங்க- கொளுத்தி போட்ட விஜய்
ஈரோடு: செங்கோட்டையன் அண்ணனை போல் நிறைய பேர் தவெகவில் சேர போகிறார்கள். அவர்களுக்கான உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் என ஈரோடு பொதுக் கூட்டத்தில் விஜய் தெரிவித்தார். இன்று மதிய உணவிற்கு பிறகு விஜய், முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது விஜய்யே இப்படி அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், மஞ்சள்... பொதுவா.. நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது மஞ்சள் வச்சிதான் ஆரம்பிப்பாங்க.. நம்ம வீட்டில் கூட அம்மா, அக்கா, தங்கைகள், நமக்காக நாம நல்லா இருக்கணும் என்பதுதான் மஞ்சள் சேலை கட்டித்தான் வேண்டிப்பாங்க..
மங்களகரமான மஞ்சள் விளையும் பூமிதான் ஈரோடு. அதுமட்டும் இல்லை.. இங்க ஒரு மகத்தான ஒரு மனிதர் பற்றி பேசியே ஆகணும்.. ஈரோடு மண்.. விவசாயத்திற்கு
பெயர் போன மண்.

மஞ்சள் என்றாலே தனி VIBE-தான். நமது கொடியிலும் மஞ்சள் இருக்கிறது. விவசாயத்திற்கு அணை மற்றும் கால்வாய் கட்டிய போது சோர்வடைந்த காலிங்கராயனுக்கு அவரது அம்மா தைரியம் கொடுத்தார். அது போல் எனக்கு அதே தைரியத்தை எனது அம்மாக்கள், தங்கைகள், அக்காக்கள் கொடுப்பார்கள். இந்த மண்ணிற்கு கவசமாக இருப்பது காலிங்கராயன் அணை, கால்வாய்! அதை கட்டியதில் உணர்வுபூர்வமாக நிறைய விஷயங்கள் நடந்தன.அன்று இந்த அணை கட்டியவருக்கு அவரின் தாய் கொடுத்த தைரியம் போல தான் எனக்கு நீங்கள் தைரியம் கொடுக்கிறீர்கள்.
அதனை கெடுக்க சூழ்ச்சி செய்ய சில செய்கின்றனர். அவர்களுக்கு தெரியாது இது இன்றைக்கு வந்த உறவல்ல. இது 35 ஆண்டுகளுக்கு மேலான உறவு. என்ன பண்ணாலும் நீங்கள் என்ன முயன்றாலும் எல்லாத்தையும் விட்டு மக்களுக்காக வந்திருக்கிற இந்த விஜய்யை மக்கள் என்றைக்கும் கைவிட மாட்டார்கள்.
தண்ணீரை சேமித்து வைத்து குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்துவது எவ்வளவு நல்ல விஷயம். ஆனால் எதையும் செய்யாமலே கதைகளை அடித்துவிடுகிறார்கள். அத்திகடவு - அவிநாசி திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தலாம். அப்படி செய்தால் 3 மாவட்டங்களில் பல லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
வள்ளுவர் கோட்டத்தில் காட்டுகிற அக்கறையை இங்கே மக்கள் வாழ்வாதாரத்துக்கு காண்பிக்கலாம். இங்கு நடப்பது ஆட்சியா இல்லை கண்காட்சியா?. 21ம் நூற்றாண்டில் மக்களை பற்றி எதையும் ஆட்சியாளர்கள் யோசிப்பதில்லை. ஆனால், அந்த காலத்திலேயே மக்களை பற்றி யோசித்து கால்வாயை கட்டிய காலிங்கராயனுக்கு கோடி கும்பிடு.
100 வருஷத்துக்கு முன்னாடி வகுப்புவாத பிரதிநித்துவம் கேட்டவர் பெரியார். எங்கள் கொள்கை தலைவர் அவர். அண்ணாவும் எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை பயன்படுத்துவதில் கேள்விகேட்க முடியாது. நாங்க ஒரு வழியில் அரசியல் செய்து போய்க்கொண்டு இருக்கிறோம். உங்களுக்கு தான் தவெக தான் ஒரு பொருட்டே இல்லை. அப்புறம் ஏன் கதறுகிறீர்கள். ஏன் புலம்புகிறீர்கள் என விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், செங்கோட்டையன் அண்ணன் தவெக வந்ததில் மகிழ்ச்சி. அவரை போல் நிறைய பேர் இங்கு வருவார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படும் என விஜய் தெரிவித்தார். அதிமுகவில் இருந்து அதிருப்தியில் இருப்பவர்கள் தவெகவில் இணைவார்கள் என ஏற்கெனவே செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அது போல் விஜய்யும் தற்போது தெரிவித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்? -
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
திருப்பரங்குன்றம் தொகுதியில் சிடிஆர் நிர்மல்குமார்.. அதிருப்தியில் தவெக! பின்னணியில் ராஜன் செல்லப்பா -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு












Click it and Unblock the Notifications