Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பிளேட்டை" திருப்பி.. எடப்பாடி பட்ட பாடெல்லாம் போச்சே.. அதென்ன துண்டு பேப்பர்?.. அறிவாலயம் குஷி போல

இடைத்தேர்தலில் சறுக்கலை கண்டுள்ள எடப்பாடி பழனிசாமி அடுத்தக்கட்ட யோசனையில் ஆழ்ந்துள்ளாராம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக எடப்பாடி பழனிசாமி அன்று வகுத்த வியூகங்கள் எல்லாமே இன்று முறிந்து விழுந்துள்ளன.. அதைவிட முக்கியமாக எந்த வியூகத்தை பிரச்சரத்தில் எடப்பாடி கையில் எடுத்தாரோ, அதே வியூகம்தான் அவருக்கு சறுக்கலையும் தந்துள்ளதுடன், திமுக கூட்டணிக்கு அபார வெற்றியையும் பெற்றுத்தந்துள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

நடந்து முடிந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியைவிட அதிகம் தீவிரம் காட்டியது திமுகதான்.. இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்பதுடன், எதிர்க்கட்சிகள் டெபாசிட்கூட வாங்க கூடாது என்ற ஆர்வம்தான் அதிகமாக இருந்தது.

இதன்காரணமாகவே, திமுக தலைவர்களும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில்
ஈடுபட்டனர்..

 வாசன் ப்ளான்

வாசன் ப்ளான்

திமுகவின் முக்கிய தலைவர்கள் மட்டுமல்லாமல், அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைவருமே ஈரோட்டில் களப்பணியில் இறங்கினர்.. முதல்வர் ஸ்டாலின் 24ம் தேதி ஈரோட்டில் பிரச்சாரம் செய்தார்.. உதயநிதி ஸ்டாலினும், வரும் 19 ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. மநீம தலைவர் கமல்ஹாசனும் பிரச்சாரத்துக்கு வந்துபோனார்.. ஆனால், அதிமுகவுக்காக, வாசன், அண்ணாமலை போன்றோர் பிரச்சாரம் செய்திருந்தபோதிலும், அதன் தாக்கம் அதிகமாக காணப்படவில்லை என்றார்கள். எனவேதான், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய முதல்கட்ட பிரச்சாரத்திலேயே அதிரடியை காட்ட துவங்கினார்..

 அதென்ன லிஸ்ட்

அதென்ன லிஸ்ட்

இதற்கு முன்பு இப்படியெல்லாம் எடப்பாடி பழனிசாமி யாரையுமே தரக்குறைவாக பேசியதில்லை.. தடித்த வார்த்தைகளையும் பயன்படுத்தியது இல்லை.. ஆனால், இப்போது பல கட்சிகள் அதிர்ச்சி அடையும், முதல்வரை இகழ்ந்து பேசியதாக, எடப்பாடியின் பிரச்சாரம் அமைந்திருந்தது.. எப்படியாவது பலமான வாக்கு வங்கியை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் இப்படி பல்வேறு பிளான்களையும் செய்தார்... குறிப்பாக, திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தை, சரியான வடிவில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதிலும் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார்.. வழக்கம்போல் ஆளும்கட்சி மீதான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் என்றாலும், இந்த முறை எடப்பாடி டீம், திமுக அரசுக்கு எதிரான விஷயங்களை எல்லாம் லிஸ்ட் போட்டு கையில் வைத்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி..

 செங்கோட்டையன்

செங்கோட்டையன்

இவைகளை அம்மக்களிடம் கொண்டு செல்லும்போது, இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த முடியும் என்றும் கணக்கு போட்டார்.. சிறுபான்மையினர் ஓட்டுக்களும் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தினார்.. திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை சீமானுக்கு சென்றுவிடக்கூடாது என்கிற டென்ஷனுக்கு இடையிலும், எடப்பாடியின் அதிரடிகள் ஆரம்பமாயின.. மூத்த தலைவர் செங்கோட்டையனை முழுக்க முழுக்க நம்பி பொறுப்பை ஒப்படைத்தார்.. குறிப்பாக ஸ்வீட்பாக்ஸ்கள் அனைத்து தரப்புக்கும் போய் சேர வேண்டும் என்றும் உத்தரவு போட்டதுடன், இதற்காகவே தன்னுடைய வலதுகரமான சேலம் இளங்கோவனுக்கும் சில அசைன்மென்ட்களை ஒதுக்கியிருந்தார்.

 ஸ்வீட் பாக்ஸஸ்

ஸ்வீட் பாக்ஸஸ்

அத்தனையும் இன்று தவிடுபொடியாகிவிட்டது.. திமுக மீது எதையெல்லாம் லிஸ்ட் போட்டு புகாரா கொண்டுவந்தாரோ, அதுபோலவே சாதனைகள் அடங்கிய வேறு ஒரு லிஸ்ட்டை கொண்டு வந்திருந்தார் ஸ்டாலின்.. இதுவரை திமுக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டதுடன், இனி செய்ய போகும் சாதனைகளையும் சொல்லி இருந்தார் முதல்வர்.. குறிப்பாக, மாநகராட்சி பணிகள் தொகுதியில் நிறைய தேங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.. இந்த கோரிக்கைகளைதான் திமுக கூட்டணியிடம் அத்தொகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிகிறது..

 ஈவிகேஎஸ்

ஈவிகேஎஸ்

திமுக கூட்டணிக்கு பிரதான வாக்குகள் கிடைக்க காரணமாக இருப்பதே, திமுக அரசு செய்து காட்டிய சாதனைகளும் + இனி தொகுதிக்கு கிடைக்க போகும் மாநகராட்சி பணி திட்டங்களுமிதான் என்கிறார்கள்.. இதைதவிர வேட்பாளர் இளங்கோவன் மீதுன நல்ல மதிப்பீடுகளும் இதற்கு இன்னொரு காரணமாகும்.. அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு தொகுதியில் பல இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பியது.. அதிருப்திகள் வெடித்தன.. அந்தவகையில், வேட்பாளர் தேர்விலும், தென்னரசுவைவிட, இளங்கோவனுக்கே மதிப்பு கூடிவிட்டது என்கிறார்கள் திமுகவினர். அதனால்தான், எப்படியும் இந்த முறை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்று திமுக தலைவர்கள் தொடர்ந்து சொல்ல துவங்கினர்.

10 + 5 ரவுண்டு

10 + 5 ரவுண்டு

முதல் சுற்றில் இருந்து கடைசிவரை இளங்கோவன் அபார வெற்றி பெற்றுள்ளார்.. வாக்கு வித்தியாசம் இதுவரை இப்படி உயர்ந்ததும் கிடையாது.. எப்படி பார்த்தாலும், அதிமுகவின் கணக்குகளை தவிடுபொடியாக்கிவிட்டுள்ளது திமுக கூட்டணியின் ராஜதந்திரங்கள்.. எட்டமுடியாத அளவுக்கு வாக்கு வித்தியாசங்கள் தென்பட்டு வருகின்றன.. எடப்பாடியின் இந்த சறுக்கலுக்கு காரணம், அவரது பிரச்சார யுக்திதான் என்று ஒரு தரப்பும், இந்த முறை, அதிமுகவுக்காக பாஜக பிரச்சாரம் செய்திருக்க கூடாது என்று இன்னொரு தரப்பும் இப்போதே விவாதத்தையும் கிளப்பி விட்டுள்ளன..

தந்திரம் + மந்திரம்

தந்திரம் + மந்திரம்

அதுமட்டுமல்ல, எப்படியும் ஆளும்கட்சிதான் இடைத்தேர்தலில் வெற்றி பெற போகிறது என்பதால், எடப்பாடி மண்ணை கவ்வ நேரிடும்.. அப்படி தேர்தலில் பின்னடைவை சந்திக்கும்போது, எடப்பாடியால் வெற்றி பெற முடியவில்லை என்பதை வலியுறுத்தி, இரட்டை தலைமை விவகாரத்தை மீண்டும் கிளப்பலாம் என்பதே ஓபிஎஸ் டீமின் தந்திரமாக இருந்து வருகிறதாம்.. இதுவே கட்சி ஒன்றாக இருந்திருந்தால், திமுகவை வீழ்த்தியிருக்கலாமே, அதானால், ஒருங்கிணைந்த அதிமுக இருந்தால்தான், திமுகவை வீழ்த்த முடியும் என்ற முழக்கத்தை தமிழக பாஜகவும் இனி கையில் எடுக்க முனையக்கூடும்..

கண்ணாடி பிம்பம்

கண்ணாடி பிம்பம்

மேலும், கூட்டணி கதவு திறக்காதா என்று காத்து கிடக்கும் டிடிவி தினகரனுக்கும் இது ஒரு நல்வாய்ப்பாக அமையும் என்கிறார்கள்.. அதாவது, எடப்பாடி பழனிசாமியின் இந்த தேர்தல் சறுக்கலை வைத்தே, ஒருங்கிணைந்த அதிமுக என்ற விவகாரத்தை மீண்டும் கையில எடுக்க, ஓபிஎஸ் டீம் + பாஜக + அமமுக போன்றவை எல்லாம் ஜரூர் வேகத்தில் தயாராகும் என்கிறார்கள்.. அந்தவகையில், இந்த இடைத்தேர்தலின் சறுக்கல்கள், எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய தலைவலியை உண்டாக்கிவிட்டு போனதாகவே கருதப்படுகிறது. விரைவில் ஒற்றை தலைமையை நோக்கி, அதிமுக நகரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுவருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+