திமுகவிலிருந்து பிரிந்த வைகோவின் போர்வாள்.. ஈரோட்டு தொகுதியின் முதல் எம்பி! யார் இந்த கணேசமூர்த்தி!
ஈரோடு: விஷம் குடித்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு பலியான ஈரோடு கணேசமூர்த்தி யார் இவர்?
மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் கணேசமூர்த்தி . இவர் கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்தவர். 1978 ஆம் ஆண்டு திமுக மாணவரணி பொறுப்பில் இருந்த இவர், பின்னர் ஒருங்கிணைந்த பெரியார் (ஈரோடு) மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பு வகித்தார்.

1993 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது அவருக்கு ஆதரவு தெரிவித்து வெளியேறிய 9 மாவட்ட செயலாளர்களில் ஒருவர் கணேசமூர்த்தி. 1989 ஆம் ஆண்டு திமுக சார்பில் மொடக்குறிச்சி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
மதிமுக தொடங்கியதிலிருந்து ஈரோடு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த இவர் 2016 ஆம் ஆண்டு முதல் மதிமுக பொருளாளராக உள்ளார். இவர் 1998ஆம் ஆண்டு பொதுத் தேர்வில் பழனி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2006 ஆம் ஆண்டு வெள்ளகோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
பின்னர் 2014 ஆம் ஆண்டு நடந்த ஈரோடு மக்களவை தேர்தலிலும் அவர் தோல்வி அடைந்தார். 2009, 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் ஈரோடு தொகுதியிலிருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.
2009ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக சார்பில் வென்ற ஒரே வேட்பாளர் கணேசமூர்த்திதான். மதிமுக சார்பில் 4 பேர் போட்டியிட்ட நிலையில் கணேசமூர்த்தி மட்டுமே வென்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவனை 49 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஈரோடு மக்களவைத் தொகுதியின் முதல் எம்பியாவார்.
2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் இவர் மதிமுக பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்து அந்த சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். ஒருவர் மாற்றுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றால் அவர் சொந்த கட்சியிலிருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு பின்னர் மாற்று கட்சியில் உறுப்பினராக வேண்டும். அப்போதுதான் அவர் மாற்றுக் கட்சியின் சின்னத்தை பயன்படுத்த உரிமைக்குரியவர் ஆவார்.
இவர் 1947 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவருக்கு பாலமணி என்ற மனைவி இருந்தார். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இவர் சென்னிமலையில் வசித்து வந்தார். இவருடைய தொழில் விவசாயம் ஆகும்.
தற்போதைய லோக்சபா தேர்தலில் தொடக்கம் முதலே கணேசமூர்த்தி தீவிர ஈடுபாடு காட்டவில்லை. திமுக கூட்டணியில்தான் மதிமுக நீடிக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை கொண்டவராகவும் கணேசமூர்த்தி இருக்கவில்லை. எதிர்பார்த்தபடியே லோக்சபா தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு தொகுதியைத்தான் திமுக ஒதுக்கியது. இந்த ஒரு தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது தொடர்பாக கணேசமூர்த்தி சில கருத்துகளைத் தெரிவித்திருந்தாராம். ஆனால் மதிமுக தலைமை வேறு ஒரு முடிவை எடுத்தது. இதுதான் கணேசமூர்த்தியை ரொம்பவே மனமுடைய வைத்ததாம். 30 ஆண்டுகள் மதிமுகவுக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறதே என்கிற வேதனையில் தென்னை மரத்துக்கு வைக்கக் கூடிய பூச்சிக் கொல்லி மாத்திரைகளை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார் கணேசமூர்த்தி. பின்னர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று கணேசமூர்த்தி எம்பியின் உயிர் பிரிந்தது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications