மேடையில் பச்சைக்கிளி முத்துச்சரம்.. நடு ரோட்டில் மண்டையை பிளக்கும் வெயிலில் குத்தாட்டம்
ஈரோட்டில் எம்ஜிஆர் பாடலுக்கு குடிமகன் ஒருவர் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video

ஈரோடு: அரைகுறை ஆடையுடன் இளம்பெண், "பச்சைகிளி.. முத்துச்சரம்.. முல்லை கொடி யாரோ" என்ற பாடலுக்கு மேடையில் நடனம் ஆட.. மண்டை பிளக்கும் வெயில் என்றுகூட பார்க்காமல், நட்டநடு ரோட்டிலேயே குத்தாட்டம் போட்டார் ஒருவர்!
இப்போதெல்லாம் பிரச்சாரத்துக்கு கூட்டமே வருவதில்லை. அதனால் ஏதேதோ செய்து, ஆட்களை திரட்டி கொண்டு வந்து விடுகிறார்கள்.
ஆனால் தலைவர்கள் கூட்டங்களுக்கு வந்து சேர லேட் ஆகிறது. அதனால் இருக்கும் கூட்டம் கலைந்துவிடாமல் இருக்க, இதுக்கும் ஒரு வழியை அதிமுகவினர் கண்டுபிடித்துள்ளனர்!

பிரச்சாரம்
இருக்கவே இருக்கு எம்ஜிஆர் பாட்டு! அதனால் கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் ஆண்களும், பெண்களும் அரைகுறை ஆடையுடன் நடனமாடி வருகிறார்கள்! இப்படித்தான் பெருந்துறை தொகுதியில் திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர் எம்எஸ்.ஆனந்தனை ஆதரித்து பிரச்சாரம் நடத்தப்பட்டது.

முகம் சுளித்தனர்
முதலமைச்சரை வரவேற்பதற்காக நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சியாம் இது! பெண்கள் எல்லாம் அரைகுறை டிரஸ்ஸில் இருந்தனர். எம்ஜிஆர் ஜோடி பாடல்களுக்கு மேடையில் நடனமாட ஆரம்பித்தனர். ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் இந்த அரை குறை ஆடையை பார்த்து முகம் சுளித்தவாறே இருந்தனர். அந்த நேரத்தில்தான் அந்த ஹீரோ என்ட்ரி கொடுத்தார்.

குடிமகன்
கூட்டத்துக்கு வரும்போதே தள்ளாடியபடியே வந்தார். நல்ல வெயில்! மேடையில் ஆடிக் கொண்டிருந்தவர்களோ ஜோடிகள்! அதுவும் எம்ஜிஆர் பாட்டு, "பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ" என்ற பாடலுக்கு ஆடியதை பார்த்ததும் குடிமகனுக்கு போதை இன்னும் தலைக்கேறிவிட்டது.

ஸோலோ டான்ஸ்
தனக்கு ஒரு ஜோடி வேண்டும் என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. தன் இஷ்டத்துக்கு மேடைக்கு கீழே இருந்து டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டார். "கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமா" என்று தன்னை எம்ஜிஆராகவே நினைத்து கொண்டு ஆடி கொண்டிருந்தார். உண்மையை சொல்ல போனால், மேடையில் ஆடிக் கொண்டிருந்தவர்களைவிட, கீழே நின்று ஸோலோ பெர்ஃபாமன்ஸ் பண்ணியவரைதான் மக்கள் ரசித்து பார்த்தபடியே சென்றனர்!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications