எங்களை அமைச்சராக ஏன் பார்க்குறீங்க! அதையெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டோம்! டென்ஷனான முத்துசாமி!
தனது ஆரம்பகால அரசியல் சிஷ்யன் எடப்பாடிக்கு அமைச்சர் முத்துசாமி பதில்.
ஈரோடு: ''எங்களை ஏன் அமைச்சராக பார்க்கிறீங்க, அதையெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு தான் இங்கே வந்திருக்கிறோம்'' என ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிரச்சாரம் செய்து வரும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருக்கிறார்.
திமுகவுக்கு தோல்வி பயம் வந்ததால் தான் 20 அமைச்சர்களை களமிறக்கியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
''அமைச்சராக இல்லாவிட்டால் கூட ஒரு திமுககாரனாக இங்கே வேலை பார்ப்போம்ல'', அப்படி எடுத்துக் கொள்ளுங்கள் என அமைச்சர் முத்துசாமி எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கூறியிருக்கிறார்.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் முத்துசாமி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது அவரது ஆதரவாளராக திகழ்ந்தவர் எடப்பாடி பழனிசாமி என்பதேயாகும்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதியில் 12 அமைச்சர்களையும், 19 மாவட்டச் செயலாளர்களையும் தேர்தல் பொறுப்பாளர்களாக பணியமர்த்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அத்துடன் சட்டமன்ற உறுப்பினர்கள், தேர்தல் பணிக்குழுவில் இடம்பெறாத அமைச்சர்கள் என ஒரு பெரிய படையே திமுக தரப்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றியை தனது கவுரவ பிரச்சனையாக கருதுகிறார் முதல்வர் ஸ்டாலின்.

என்னிடம் கேட்காதீர்
இதனால் அவரே 2 நாட்கள் அங்கு பிரச்சாரத்துக்கு செல்லவுள்ளார். அதுமட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் 2 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். இந்நிலையில் ஈரோட்டில் பரபரப்பாக பிரச்சாரம் செய்து வரும் அமைச்சர் முத்துசாமி, எடப்பாடி பழனிசாமி பேசுவதை வைத்தெல்லாம் தன்னிடம் கேள்விகள் கேட்க வேண்டாம் என்றும் அவர் திமுகவை குறை கூறுவதை தவிர வேறு எதை பேசுவார் என எதிர்பார்க்கிறீர்கள் எனவும் செய்தியாளர்களிடம் கேட்டார்.

என்ன செய்தார் எடப்பாடி?
மேலும், அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை அதிமுக ஆட்சியில் நினைத்திருந்தால் முடித்திருக்கலாம் ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை என்றும் 30 விவசாயிகளின் நிலம் மட்டும் பிரச்சனையாக இருந்தது அதை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் பேசி சுமூகமாக்கப்பட்டு திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதிமுக ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் ஈரோடு மாநகருக்கு எடப்பாடி பழனிசாமி என்ன செய்திருக்கிறார் என வினவிய அவர், ஸ்டாலின் முதல்வரான பிறகு ஈரோடு மாநகராட்சிக்கு ரூ.300 கோடி கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.

20 அமைச்சர்கள்
திமுகவுக்கு தோல்வி பயம் வந்ததால் தான் 20 அமைச்சர்களை களமிறக்கியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு டென்ஷனாக பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, ''எங்களை ஏன் அமைச்சராக பார்க்கிறீங்க, அதையெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு தான் இங்கே வந்திருக்கிறோம். இங்கே பாருங்க எங்க கூட போலீஸ் யாரும் இருக்காங்களா, தனி ஆளாக தான் பிரச்சாரம் செய்கிறோம்'' எனத் தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications