ஆஹா.. சட்டென ‛‛ஐ லவ் யூ’’ சொன்ன தொண்டர்.. பதிலுக்கு சீமான் செய்த ‛‛சம்பவம்’’..யாருமே எதிர்பார்க்கல
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். நேற்று தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு தொண்டர் ஒருவர் ‛ஐ லவ் யூ' எனக்கூறிய நிலையில் சீமான் சற்று யோசிக்கலுக்காமல் செய்த சம்பவம் தொண்டர்களுக்கு சிரிப்பலையை ஏற்படுத்தியதோடு கைத்தட்டை குவித்தது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவரொ கடந்த மாதம் மறைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி உள்ளார்.
அதிமுகவில் தென்னரசு, தேமுதிகவில் ஆனந்த், நாம் தமிழர் கட்சியில் மேனகா உள்பட மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். கடந்த ஒரு மாதம் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து இருந்த நிலையில் நேற்றுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது.

நாம் தமிழர் பேட்டி
ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், காங்கிரஸ் தலைவர்கள் வீதிவீதியாக பிரசாரம் செய்தனர். நேற்று முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலர் பிரசாரம் செய்தனர். தேமுதிக ஆனந்துக்கு ஆதரவாக விஜயகாந்த் மனைவி பிரேமலாதா, அவரது சகோதரர் சுதீஷ், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோரும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகாவை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார்.

சீமான் பிரசாரம்
இந்நிலையில் தான் நேற்று சீமான் ஈரோட்டில் வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பல் ஈடுபட்டார். ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா, மரப்பாலம், மண்டபம் வீதி, மகாஜன பள்ளிக்கூடம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கரும்பு விவசாயி சின்னத்துக்கு வாக்குகளை செலுத்தும்படி பொதுமக்களிடம் கேட்டு கொண்டார். இதையடுத்து மகாஜன பள்ளிக்கூடம் அருகே பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சீமான் பேசினார். நடந்த பொதுக்கூடத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாம் தமிழர் என அறிமுகம்
மாற்றத்தை கொண்டு வர, ஊழல், லஞ்சமில்லாத நிர்வாகத்தை வழங்கி மண்ணை காக்க, தமிழர்களின் நலத்தை காக்க நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சாதி, மதங்களாக பிரிந்து நின்றால் நாம் அச்சுறுத்தப்படுவோம். ஒரே இனமாக இணைந்து நின்றால் பாதுகாப்பாக வாழ்வோம்.மார்க்கம், மதம் எல்லாம் மாறக்கூடியது. ஆனால் மொழியும், இனமும் மாறாதது. இனம் தான் நம் அடையாளம். உலகத்திற்கு எங்கு சென்றாலும், நாம் கிறிஸ்தவர்கள் என்றும், இஸ்லாமியர்கள் என்றும் அறிமுகப்படுத்த கூடாது. நாம் தமிழர் என்று அறிமுகப்படுத்த வேண்டும்.

இடைத்தேர்தல்
இது இடைத்தேர்தல் அல்ல. எடைத்தேர்தல் என முதல்வர் பேசியுள்ளார். இதனை நான் ஒப்புக்கொள்கிறேன். ஏனென்றால் நீங்கள் கொடுத்த வேட்டி, குக்கர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பொருட்களை கொடுத்து எவ்வளவு ஓட்டு வந்துள்ளது என பார்க்கும் உங்களுக்கு இது எடைத்தேர்தல் தான். நம்மிடம் ஆகச்சிறந்த கருத்து இருக்கிறது. அவர்களிடம் பணம் இருக்கிறது. நம்மிடம் தன்மானம் மிக்க தமிழர் என்கிற இனம் இருக்கிறது.

இது ரத்தம் சிந்தாத போர்
தன்மானம், போர் ஆகிய இரண்டிற்கும் தான் இங்கு போர் நடக்கிறது. இது ஒரு புரட்சிகர அரசியல் போர். போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர். நாம் தற்போது செய்வது ரத்தம் சிந்தாத போர். ஆனால் 2 நாளுக்கு முன்பு கூட ரத்தத்தை சிந்திவிட்டோம்(திமுக-நாம் தமிழர் மோதல்). அதேநேரத்தில் ரத்தத்தை சிந்தவும் செய்துவிட்டோம். துன்பத்தை கொடுத்தனுக்கு துன்பத்தை கொடுத்துவிட வேண்டும். வலியை கொடுத்தவனுக்கு அந்த வலியின் அருமையை உணர்த்திவிட வேண்டும்.'' என்றார்.

‛ஐ லவ் யூ’ சொன்ன தொண்டர்
மேலும் ‛‛பாலியல் தொந்தரவு, கூட்டு வன்புணர்வு, நகை கொள்ளை செய்தால் குற்றம் செய்பவர் உடனடிக்குடன் தண்டிக்கப்படுவார்'' என கொஞ்சம் ஆக்ரோஷமாக பேசினார். இந்த வேளையில் கூட்டத்தில் இருந்த தொண்டர் சீமானை பார்த்து ‛‛ஐ லவ் யூ'' என்றார். இதை கேட்ட சீமான் சிரித்தபடியே ‛மீ டூ'' என்றார். இதை கேட்ட தொண்டர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்ததோடு, சிரிப்பலை ஏற்பட்டது. இதுபற்றி சீமான் கூறுகையில், ‛‛அவர் அன்பை தண்டார். பதிலுக்கு நானும் அன்பை கொடுத்தேன்'' என சிரித்தபடி தொடர்ந்து பேசினார். இந்நிலையில் தான் தொண்டர் ஐலவ்யூ சொல்லியதும், சீமான் மீடூ என பதிலுக்கு தெரிவித்து தொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.












Click it and Unblock the Notifications