Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"திமுககாரங்க தாக்குறாங்க".. தலைமை நீதிபதியிடம் முறையிடும் நாம் தமிழர்.. ஈரோடு கிழக்கில் பரபரப்பு!

தேர்தலில் கலவரம் நடப்பதாக இவர்கள் முறையிட உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோட்டில் நேற்று நடந்த கலவரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியிடம் நாம் தமிழர் கட்சி முறையிட உள்ளது. திமுகவினர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக நாம் தமிழர் முறையிட உள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. முதலில் அமைதியாக இருந்த தேர்தல் களம் அதன்பின் கொலுசு, பணப்பட்டுவாடா புகார்களால் பரபரப்பிற்கு உள்ளானது.

இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கலவரம் நடக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சீமான் அருந்ததியர்களுக்கு எதிராக பேசியது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

 அருந்ததியர்

அருந்ததியர்

நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவாக இரண்டு நாட்களுக்கு முன் சீமான் பிரச்சாரம் செய்தார். மேனகா முதலியார் ஜாதியை சேர்ந்தவர். அதனால் முதலியார் ஜாதி பற்றி பேசிய சீமான், முதலியார் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? மானத் தமிழ் மக்கள்தான் முதலியார். போர் நடந்தால் முதலில் வேல் ஏந்தி வரும் மக்கள்தான் முதலியார். அவர்களை தூய்மை பணி செய்ய விஜய நகர பேரரசை சேர்ந்த தெலுங்கன். அவர்கள் வரவில்லை என்றதும் வேறு வழியில்லாமல் அங்கிருந்த ஆதி குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள் எனவும் சீமான் பேசினார்.

சீமான்

சீமான்

அதாவது ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கு பேசும் தூய்மை பணியாளர்கள்தான் அருந்ததியர்கள் என்று சீமான் கூறினார். அவரின் இந்த பேச்சு காரணமாக ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் அருந்ததியர்கள் போராட்டங்களை செய்து வருகின்றனர். நாம் தமிழர் நிர்வாகிகளை விரட்டி அடித்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று மேனகா நவநீதனுக்கு வாக்குகள் சேகரிக்க வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் அருந்ததியர்கள் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கே கை கலப்பு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. இதனால் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.இந்த மோதலுக்கு பின் திமுக இருப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் புகார் வைத்துள்ளார்.

மோதல்

மோதல்

இந்த மோதலில் திமுக நிர்வாகி ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திமுகவினர் கையில் இருந்து கொடி கம்பத்தை வைத்து கடும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 நாம் தமிழர் கட்சியினரின் மண்டை உடைக்கப்பட்டது. இவர்கள் ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கே துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர். அங்கே கலவரத்தில் துணை ராணுவ படையினர் மீதும் நாம் தமிழர், திமுக கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ஈரோட்டில் நேற்று நடந்த கலவரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீசுவர் நாத் பண்டாரியிடம் நாம் தமிழர் கட்சி முறையிட உள்ளது. திமுகவினர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக நாம் தமிழர் முறையிட உள்ளது.

முறையீடு

முறையீடு

தேர்தலில் கலவரம் நடப்பதாக இவர்கள் முறையிட உள்ளனர். இது தொடர்பாக முன்பு சீமான் அளித்த பேட்டியில், அளித்த பேட்டியில், எங்கள் பேரணியில் தாக்குதல் நடத்துகிறார்கள். இந்த தாக்குதலுக்கு திமுகதான் காரணம். பயம் அச்சம் காரணமாக திமுகதான் எங்கள் மீது தாக்குதல் நடத்தியது. என்ன பேசிவிட்டேன் என்று என் மீது வன்கொடுமை வழக்கு இவர்கள் போட்டார்கள். இவர்கள் கொலுசு கொடுக்கிறார்கள். குக்கர் கொடுக்கிறார்கள். இதெல்லாம் தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடுதான் கொடுக்கிறார்களா? அவர்கள் அனுமதி வைத்துக்கொண்டுதான் இந்த வேலையை செய்கிறார்களா? அதிமுக, திமுக எல்லாம் அனுமதி பெற்றுக்கொண்டுதான் இப்படி செய்கிறதா? மக்களை கூட்டிக்கொண்டு இவர்கள் மண்டபத்தில் அடைகிறார்கள்.

தேர்தல் ஆணையமா?

தேர்தல் ஆணையமா?

இதெல்லாம் தேர்தல் ஆணைய அனுமதியோடு நடக்கிறதா? அவர்களுக்கு ஒரு சட்டம்.. எங்களுக்கு ஒரு சட்டமா? இதுதான் ஜனநாயகமா? நாங்கள் அமைதியாக பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தோம். எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். மாடியில் இருந்து எங்கள் பிள்ளைகள் மீது கல்லை தூக்கி வீசி எறிகிறார்கள். எங்களை தாக்கியது திமுக - காங்கிரஸ்தான். பாகிஸ்தான், இலங்கையில் இருந்தா எங்களை தாக்க போகிறார்களா? நாங்களும் திருப்பி கத்தி, கட்டையை கொண்டு வந்தால் ஓகேவா? நாங்கள் அடித்தால் கலவரம் ஏற்படும், நாங்கள் திருப்பி அடிக்க மாட்டோம் என்ற நினைப்பா? இப்படித்தான் ஆட்சி நடக்கிறதா? கல்லை வைத்து அடித்தால் நாங்கள் போய்விடுவோம் என்று நினைக்கிறீர்களா? அப்படித்தான் எங்களை பார்த்தால் தெரிகிறதா? ஜனநாயம் இங்கே எங்கே இருக்கிறது சொல்லுங்கள்? இது பணநாயகம் கொண்ட நாடு. நான் இப்போது என்ன அருந்ததியர் பற்றி பேசிவிட்டேன் என்று என் மீது வழக்கு போடுகிறீர்கள். என் மீது வழக்கு போடுங்கள். உங்கள் அப்பா என்னை ஜெயிலில் போட்டார். நான் அடங்கவில்லை. நீங்கள் என்னை தூக்கி பாருங்கள். முடிஞ்சா என்னை தூக்குங்கள். நாளை முதல்வர் ஸ்டாலின் பேரணி வரும் போது நாங்களும் தகராறு பண்ணுவோம். அப்படி செய்தால் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று ஸ்டாலின் பேரணியை ரத்துசெய்வார்களா? எங்கள் பேரணியை ரத்து செய்தது போல அவர்கள் பேரணியை ரத்து செய்வார்களா என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+