பாரதி 1931ல் ஈரோட்டில் பேசினார்.. தேதியோடு சொன்ன அண்ணாமலை: “அங்கதான் சிக்கலே”- நெட்டிசன்கள் கிண்டல்!
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற பாதயாத்திரையின்போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாரதியார் 1931ல் உரையாற்றிய மண் ஈரோடு எனத் தெரிவித்தது கடும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தொகுதி வாரியாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். 80 தொகுதிகளைக் கடந்துள்ளது அண்ணாமலையின் யாத்திரை. அந்தவகையில், ஈரோட்டில் அண்ணாமலையின் பாதயாத்திரை நேற்று நடைபெற்றது. அப்போது மக்கள் மத்தியில், பாஜகவுக்கு ஆதரவு திரட்டியும், திமுக அரசை விமர்சித்தும் பேசினார் அண்ணாமலை.

அண்ணாமலை பேசுகையில், "கணித மேதை ராமானுஜம், பாசனத் தந்தை எம்.ஏ.ஈஸ்வரன், நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய மாவீரன் தீரன் சின்னமலை போன்றவர்கள் பிறந்த புனிதமான மாவட்டம் ஈரோடு. நிறைய எழுத்தாளர்கள், சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களின் ஊர். சினிமா துறையில் கால் பதித்து வெற்றியைச் சூட்டிக்கொண்டவரின் ஊர்.
முண்டாசுக் கவிஞன் பாரதி, கடைசியாக பொதுமக்களிடம் உரையாற்றிய ஊர் ஈரோடு மாவட்டத்தின் கருங்கல்பாளையம். 31-7-1931ல் மகாகவி பாரதி, இந்த ஈரோட்டு மண்ணில் தான் மனிதனுக்கு மரணமில்லை என்ற அற்புதமான உரையை ஆற்றினார். விவசாயம், நெசவுத் தொழில், தொழிற்சாலைகள் என அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து சிறக்கும் மண் ஈரோடு." என்றார்.
மேலும் பேசிய அண்ணாமலை, "நமது மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலமாக ஈரோடு நகரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி 1304 கோடி ரூபாய். இதில் 1079 கோடி மதிப்பிலான பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. 224 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், கனி ஜவுளிச் சந்தை புதுப்பித்தல் பணி, பெரும்பள்ளம் ஓடை சீரமைப்பு பணிகள் என்று 54 திட்டங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தபட்டுள்ளன. ஆனால், திமுக, மத்திய அரசு திட்டங்கள் அனைத்திலும் ஊழல் செய்கிறது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக, மத்திய அரசின் நலத்திட்டங்களைக் கூறி வாக்கு கேட்கும். திமுக எதைச் சொல்லி வாக்கு கேட்கப் போகிறது? ஈரோடு அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு புற்றுநோய் சிகிச்சை பிரிவு, ஈரோட்டில் அரசு வேளாண்மை கல்லூரி, ஈரோட்டில் அரசு சட்டக்கல்லூரி, ஈரோட்டில் உணவு பூங்கா, ஈரோடு மாவட்டத்தில் பல்கலைக்கழகம், வேளாண் கருவிகள் உற்பத்தி தொழிற்பேட்டை, ஈரோடு வர்த்தக மையம், நெசவாளருக்கென்று தனி கூட்டுறவு வங்கி என திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை." என விமர்சித்துப் பேசினார்.

அண்ணாமலை தனது பேச்சில் குறிப்பிட்ட விஷயம் தான் தற்போது சமூக வலைதளங்களில் கடுமையான கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது. 1931ஆம் ஆண்டில் பாரதியார், ஈரோட்டு மண்ணில் உரையாற்றினார் என தேதியோடு குறிப்பிட்டுப் பேசினார் அண்ணாமலை. ஆனால், பாரதியார் 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார். இதனைக் குறிப்பிட்டு, அண்ணாமலையை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
1921ல் இறந்த பாரதியார் 10 வருடம் கழித்து எப்படி ஈரோட்டில் பேசினார்? என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். மிகச் சரியாக பேசுவதாக நினைத்து தேதியைக் கூட விடாமல் பேசி, இப்படி தொக்காக மாட்டிக்கொண்டு விட்டார் அண்ணாமலை என பலரும் விமர்சித்து வருகின்றனர். அண்ணாமலையின் பேச்சை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் மீம்களும் பகிரப்பட்டு வருகின்றன.
-
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்! -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா?












Click it and Unblock the Notifications