ஈரோட்டில் விஜய்யை பார்க்க Pass, QR Code கிடையாது! புஸ்ஸி முன்பு அழுத்தமாக சொன்ன செங்கோட்டையன்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் விஜய் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கு வருவதற்கு பாஸ், QR Code கிடையாது என தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலையில் விஜயமங்கலம் என்ற பகுதியில் விஜய் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் வரும் 18 ஆம் தேதி நிகழ்கிறது. இந்த பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தை செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
அப்போது செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் வரும் 18ஆம் தேதி வருகை தரும் போது காவல் துறை என்னென்ன வேண்டுகோள் வைத்தார்களோ, அதை காட்டிலும் கூடுதலாக பணிகளை நிறைவேற்றியுள்ளோம்.
குறிப்பாக பாதுகாப்பு அடிப்படையில் என்னென்ன தேவைகளை குறிப்பிட்டுள்ளார்களோ அவை அனைத்தும் நாளை மதியத்திற்குள் நிறைவு செய்யப்படும்.
பாதுகாப்பு அடிப்படையில் 40 கேமராக்கள் பொருத்தப்படுகிறது. அவசர தேவைக்காக 40 வாக்கி டாக்கிகள் கொடுக்கப்படும். 24 ஆம்புலன்ஸ்கள், 72 மருத்துவர்கள் , 120 செவிலியர்கள் இடம்பெறுவார்கள். அந்த ஆம்புலன்ஸ்களில் அனைத்து வசதிகளும் இருக்கும். 20 சின்டெக்ஸ் டேங்குகளில் தண்ணீர் வைக்கப்படும்.
மேலும் வரும் அத்தனை பேருக்கும் தண்ணீர் பாட்டில் கொடுக்கப்படும். மொபைல் டாய்லெட்டும் 20 இடங்களில் நிறுத்தப்படும். 3 தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்படும். வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது வரை தமிழகம் கண்டிராத அளவிற்கு பாதுகாப்பு அடிப்படையில் இந்த கூட்டம் மற்ற கட்சிகளுக்கு முன்மாதிரியாக அமையும்.
கழகத்தைச் சேர்ந்தவர்கள் 10 ஆயிரம் பேர், பொதுமக்கள் 25 ஆயிரம் பேர், அவர்கள் வருவதற்கு பாஸ் கிடையாது. கியூ ஆர் கோடு கிடையாது. எல்லோரும் வந்து விஜய்யை சந்தித்து விட்டு மகிழ்ச்சியோடு செல்லலாம். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வரும் 18ஆம் தேதி ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள சரளை பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக அந்த பகுதியில் சுங்கச்சாவடி அருகே 26 ஏக்கர் நிலத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
300-க்கும் மேற்பட்டோர் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளை தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மேற்பார்வை செய்து வருகிறார். இந்த கூட்டம் 18ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இதற்காக 43 நிபந்தனைகளை காவல் துறை விதித்துள்ளது.
அதாவது தேசிய நெடுஞ்சாலையில் மக்களுக்கு இடையூறு செய்யக் கூடாது. அங்கு தொண்டர்கள் நிற்கக் கூடாது. சர்வீஸ் சாலையில் இருந்து வலது புறம் சுமார் 250 அடி தூரம் இடைவெளிவிட்டு நிகழ்ச்சிக்கான தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
பிரச்சார வாகனத்தில் முக்கிய நபர்கள் மட்டுமே பரப்புரையின் போது இருக்க வேண்டும். விஜய்யின் பிரச்சார வாகனத்தை சுற்றி 50 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும்.
கட்சியினர் உள்ளே வரும் போது தள்ளுமுள்ளு ஏற்படக் கூடாது. வரிசையாக அனுமதிக்க வேண்டும். இரும்பு பாக்ஸ்களை அமைக்க வேண்டும். அதில் 80 சதவீதம் மட்டுமே அனுப்ப வேண்டும். அதாவது 500 பேர் நிற்க முடியும் பாக்ஸில் 400 பேரை மட்டுமே அனுப்ப வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
-
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
“சாக்கு போக்கு சொல்லக்கூடாது”.. விஜய் பிறந்தநாளையொட்டி தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அட்வைஸ்! -
Z பாதுகாப்பை கூட நம்ப மாட்டார்? விஜய் நம்பும் ஒரே ஆள் நயீம் மூஸா! முதல்வரின் இடது கை! யார் இவர்? -
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்












Click it and Unblock the Notifications