ஆயிரம் மைல் கடந்து வந்த கள்ளக்காதல்.. கணவனை பிரிந்து வந்த பெண்.. கழுத்தை நெறித்து கொன்ற இளைஞர்!
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கள்ளக்காதலியை கழுத்தை நெறித்து கொலை செய்த வடமாநில தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்து உள்ளது கந்தாம்பாளைம். இங்கு தனியார் விசைத்தறி கூடம் ஒன்றில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அன்கீத்குமார் (வயது 38) என்பவர் வேலை செய்து வருகிறார்.

இதேபோல் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரேஷ்மா காதுகான் (36) என்பவரும் அதே விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்து வந்தார். ரேஷ்மா காதுகானுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு ரேஷ்மா காதுகான் பிரிந்து விட்டார்.
ஒரே விசைத்தறி கூடத்தில் ரேஷ்மா காதுகானும், அன்கீத் குமாரும் வேலை பார்த்து வந்துள்ளதால் அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறி இருக்கிறது. இதனால் அவர்கள் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் அன்கீத் குமாருக்கும், ரேஷ்மா காதுகானுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, கடந்த 13-ந் தேதி ரேஷ்மா காதுகான் கந்தாம்பாளையம் விசைத்தறி கூடத்துக்கு அருகே உள்ள தனியார் பள்ளிக்கூட சுற்றுச்சுவரின் அருகே மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
பெண் விசைத்தறி தொழிலாளி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது குறித்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு கிடந்த ரேஷ்மா காதுகானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பிரேத பரிசோதனை முடிவில் ரேஷ்மா காதுகான் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது இதைத்தொடர்ந்து போலீசார் சந்தேக மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக மாற்றினர். மேலும் அவரை கொலை செய்தது அவருடைய கள்ளக்காதலன் அன்கீத் குமார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
போலீசார் தேடுவதை அறிந்த அன்கீத் குமார் விசைத்தறி கூடத்தில் இருந்து தலைமறைவானார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அன்கீத் குமார் பெருந்துறைக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஒரு மாதமாக தலை மறைவாக இருந்த அன்கீத் குமாரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications