அடப்பாவமே.. அவ்வளவு ஓட்டும் எங்கய்யா போச்சு..? 6 சதவீதத்தோடு நின்று கொண்ட நாம் தமிழர் கட்சி!
கருத்துக்கணிப்பில் நாம் தமிழர் கட்சிக்கு எதிர்பார்க்கப்பட்ட வாக்குகள் களத்தில் எதிரொலிக்கவில்லை.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மேனகா நவநீதன் எவ்வளவு வாக்குகளைப் பெறுவார் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. ராஜநாயகம் குழுவினர் கருத்துக்கணிப்பின்படி நாம் தமிழர் கட்சிக்கு 9.5% -17% வரை வாக்குகள் கிடைக்கலாம் என கூறப்பட்ட நிலையில், 5% வாக்குகளையே நாதக பெற்றுள்ளது. மொத்தமாக, 10,804 வாக்குகளையே நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.
காரணம், இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சுகளால் அருந்ததியர் சமூக மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர்.
அதேநேரம், கருத்துக்கணிப்புகளில் நாம் தமிழர் கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்ததும் வெளிப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 16 மேசைகள் அமைக்கப்பட்டு 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஒதுங்கிய கட்சிகள்
தங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்பதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து வெளியேறுவதாக அமமுக அறிவித்தது. அதேபோல் இந்த தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்றும் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் முன்பே அறிவித்துவிட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியும் காங்கிரஸ் - திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. பாஜகவும் கூட அதிமுகவின் பொது வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பதாக கூறிவிட்டது. இப்படியாக மூன்றாவது இடத்திற்குப் போட்டி போடும் பல கட்சிகள் போட்டியில் இருந்து ஒதுங்கி விட்டன. நாம் தமிழர் கட்சியும் தேமுதிகவும் மட்டுமே களத்தில் உள்ளது.

சீமானுக்கு வாய்ப்பு
இது, நாம் தமிழர் கட்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பு தந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்தனர். ஒவ்வொரு தேர்தலிலும் சீரான வளர்ச்சியை தக்கவைத்து வரும் சீமான், இந்த இடைத்தேர்தலில், மற்ற கட்சிகளின் பின்வாங்கல் காரணமாக கூடுதல் ஆதரவைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், சீமான் அருந்ததியர் சமூக மக்கள் பற்றி பிரச்சாரத்தின்போது பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

கருத்துக்கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக பேராசிரியர் ராஜநாயகம் வழிகாட்டுதலில் மக்கள் ஆய்வு நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 39.5 முதல் 65 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசு 24.5 முதல் 41 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதாகவும், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன் 9.5 முதல் 17 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தேமுதிக 4 சதவீத வாக்குகள் வரை பெறக்கூடும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.

முந்தும் நாம் தமிழர் கட்சி
மேலும், முதல் வாக்காளர் உள்ளிட்ட 21 வயதுக்குப்பட்ட இளம் வாக்காளர்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சிக்கு அமோக ஆதரவு வெளிப்படுவதாக இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்தது. 21 வயதிற்குள்ளான வாக்காளர்களிடையே நடத்திய கருத்துக்கணிப்பில், நாம் தமிழர் கட்சி 29.5 சதவிகிதம் ஆதரவும், காங்கிரஸ் வேட்பாளருக்கு 28.5 சதவிகித ஆதரவும் உள்ளது. அதாவது, காங்கிரஸை முந்தி, இளம் வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி என கருத்துக்கணிப்பு முடிவு வெளிப்பட்டது.

உற்று கவனிக்கும் தேர்தல்
கருத்துக்கணிப்புகளின்படி நாம் தமிழர் கட்சி 9.5 முதல் 17 சதவீத வாக்குகளைப் பெறும் எனக் கூறப்பட்டிருந்தது. சீமான் ஒவ்வொரு தேர்தலிலும் சீரான வளர்ச்சியைப் பெற்று வரும் நிலையில், இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்றைய வாக்கு எண்ணிக்கையில் உண்மையானால், நாம் தமிழர் கட்சியின் வலிமை அதிகரிக்கும். வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தி கொண்ட கட்சியாக நாம் தமிழர் கட்சி மாறக்கூடும். எனவே, இந்த இடைத்தேர்தலில் நாதகவின் செயல்பாடுகள் உற்று நோக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சற்று நேரத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள் உண்மையாகுமா என்பது தெரியவரும்.

நாதக 10,804 வாக்குகள்
16 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவில் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன் 10,804 வாக்குகளையும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,301 வாக்குகளையும் பெற்றுள்ளனர். ஆக, சுமார் 6% வாக்குகளையே நாதக பெற்றுள்ளது. இதன் மூலம் கருத்துக்கணிப்பில் வெளிப்பட்ட அளவுக்கு நாதகவுக்கு தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

கடந்த தேர்தலை விட குறைவு
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி 11,629 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த இடைத்தேர்தலில் சீமான் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையிலும், சுமார் 800 வாக்குகள் கடந்த தேர்தலை விட குறைந்துள்ளது. நாதக ஒவ்வொரு தேர்தலிலும் வளர்ச்சியையே கண்டு வந்த நிலையில், தற்போது கடந்த தேர்தலை விட வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. இத்தனைக்கும் கடந்த தேர்தலை விட சுமார் 18 ஆயிரம் வாக்குகள் அதிகம் பதிவானது குறிப்பிடத்தக்கது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications