அரசு மருத்துவமனையில் ஏசி, டிவியுடன் கட்டண படுக்கை அறை.. ஈரோட்டில் தொடங்கி வைத்த அமைச்சர் மா.சு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று ஈரோடு அரசு மருத்துவமனையில் ஏசி வசதி, தொலைக்காட்சியுடன் கூடிய கட்டண படுக்கை அறை வசதியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பேசிய மா சுப்பிரமணியன், தமிழகத்தில் 16 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் இந்த வசதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் குளிர்சாதன வசதி, தொலைக்காட்சி வசதியுடன் கூடிய சிறப்பு கட்டண அறை வசதியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Tamil Nadu Government Hospital Ma Subramanian

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏசி மற்றும் தொலைக்காட்சி வசதியுடன் கூடிய கட்டண படுக்கை அறை வசதி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கடந்த பட்ஜெட்டின் போது தமிழகத்தில் 16 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த வசதி ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ஈரோடு அரசு மருத்துவமனையில் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே கோவை, மதுரை, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் இந்த கட்டண படுக்கை அறை திட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது ஈரோட்டில் 20 கட்டண படுக்கை அறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டண அறையில், குளிர்சாதன வசதி, தனி கழிப்பறை, தனி குளியல் அறை, தொலைக்காட்சி பெட்டி ஆகிய வசதிகள் உள்ளன. இதற்கான கட்டணங்கள் எவ்வளவு? என்பது பற்றி அதிகாரிகள் அறிவிப்பார்கள்.

முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் 1,900 மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று புகார் வந்தது என்றால் அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முற்றிலும் இலவச சிகிச்சை என்றாலும் சில மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைபாடுடன் இருப்பதால் நோயாளிகள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும் போது சில சிரமங்களை அனுபவிக்கிறார்கள். இதனாலேயே பலரும் தனியார் மருத்துவமனையை நாடி செல்லும் நிலையும் உள்ளது.

தற்போது அரசு மருத்துவமனைகளிலேயே கட்டணத்துடன் கூடிய படுக்கை அறைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது நோயாளிகளின் சிரமத்தை பெரிதும் போக்கும் என்று பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வசதியை அமல்படுத்துவது மட்டுமின்றி தொடர்ந்து சிறப்பான முறையில் பராமரிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+