தர்மபுரி மக்கள் மனதில் ஈரம் இல்லையா.. சௌமியா அன்புமணி தோல்வி.. பாமகவினர் கண்ணீர் போஸ்டர்
ஈரோடு: தர்மபுரி லோக்சபா தொகுதியில் பாமக தலைவர் அன்புமண ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி தோல்வி அடைந்ததை ஏற்க முடியாமல் பாமகவினர் பலர் கவலையுடன் கருத்துக்களை பதிவிட்டும் வருகிறார்கள். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் பாமகவினர் "மீண்டு வா என் தாயே.." என்று போஸ்டர் ஓட்டியுள்ளனர்.
திமுக தோற்கும் வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதியாக அத்தனை கருத்துக்கணிப்புகளும் சொன்ன ஒரு தொகுதி என்றால் தர்மபுரி தான். அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிட்டது தான். சௌமியா அன்புமணி மீது எந்த விமர்சனங்களை முன்வைக்க முடியாதது ஒருபுறம் எனில், அங்கு பாமகவிற்கு இருந்த அசுர பலம் போன்ற காரணங்களால் கண்டிப்பாக தர்மபுரியில் திமுக வெற்றி பெறுவது கடினம் என்றே கணிப்புகள் கூறின,

கணிப்புகள் சொன்னது போலவே தர்மபுரி லோக்சபா தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு சுற்றிலும் முன்னிலை வகித்து வந்தார் சௌமியா அன்புமணி, 11-வது சுற்றுவரை முன்னிலை வகித்த அவர் கடும் இழுபறிக்கு இடையே வெற்றி வாய்ப்பை இழந்தார்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஆ.மணி, அ.தி.மு.க. வேட்பாளர் அசோகன், பாஜக கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் சௌமியா அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்பட 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 24 பேரில் திமுக, அதிமுக, பாமக இடையே தான் கடும் போட்டி நிலவியது.
சௌமியா அன்புமணி கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்தார். அவருக்கு ஆதரவாக அவருடைய 3 மகள்களும் தொகுதியில் தங்கி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்கள். சௌமியா அன்புமணி மகள்களின் பிரச்சாரத்திற்கு தர்மபுரி மாவட்டம் முழுவதுமே நல்ல வரவேற்பு இருந்தது, பா.ஜனதா கூட்டணியில் தமிழ்நாட்டில் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதியாகவே தர்மபுரி பார்க்கப்பட்டது.
ஆனால் தேர்தல் முடிவுகள் திமுகவிற்கு சாதகமாக மாறியது.. வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுகளாக நடந்த நிலையில், முதல் சுற்றிலேயே 25 ஆயிரத்து 428 வாக்குகள் பெற்று தி.மு.க. வேட்பாளர் மணியை விட 12 ஆயிரத்து 128 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். அப்படியே 11 சுற்றுகளில் சவுமியா அன்புமணியே முன்னிலை வகித்தார். 12-வது சுற்றில் சுமார் 7 ஆயிரம் வாக்குகள் தி.மு.க. வேட்பாளர் முன்னிலை பெற்றார். அடுத்தடுத்த சுற்றுகளில் சுமார் 10 ஆயிரம் வாக்குகளோடு தி.மு.க. வேட்பாளர் மணி முன்னிலைக்கு வந்தார். ஆனால் கடைசி சுற்று முடிவில் சௌமியா அன்புமணி சுமார் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். திமுக வேட்பாளர் மணி 4,32,667 வாக்குகள் பெற்றார். சௌமியா அன்புமணி 4,11,367 வாக்குகள் பெற்றார்.
சௌமியா அன்புமணி , தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உள்பட்ட பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி ஆகிய தொகுதிகிளில் திமுக வேட்பாளர் மணியைவிட அதிக வாக்குகள் வாங்கியிருந்தார். அதேபோல் பாலக்காடு, மேட்டூர் தொகுதிகளில் மணியைவிட மிக குறைவான வாக்குகளே கிடைத்திருந்தது. ஆனால் அரூர் தனி தொகுதியால் அவரது வெற்றி அப்படியே பறிபோனது. அரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் மணியைவிட சௌமியா அன்புமணி, சுமார் 40 ஆயிரம் வாக்குகள் குறைவாக வாங்கினார். இதனால் முன்னிலையில் இருந்த சௌமியா அன்புமணி, கடைசி சுற்றில் சுமார் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
சௌமியா அன்புமணியின் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் பாமகவினர் பலர் சமூக வலைதளங்களில் தங்கள் கவலைகளை கருத்துக்களாக வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஈரோட்டு மாநகரின் புறநகர் பகுதியான பள்ளிப்பாளையத்தில் கண்ணீர் மல்க போஸ்டர் ஓட்டியுள்ளனர் பாமகவினர். "மீண்டு வா என் தாயே.." என்ற பெயரில் ஓட்டியள்ள போஸ்டரில், "ஆறுதல் கூற வார்த்தைகள் தேடினேன்.. வார்த்தைகள் வரவில்லை..
கண்ணில் கண்ணீர் தான் வருகிறது... எதை கொண்டு ஆறுதல் சொல்வேன் தாயே...!!!
கல்லுக்கும் ஈரம் உண்டு, தர்மபுரி மக்கள் மனதில் ஈரம் இல்லை என்று சொல்லவா.. !
தோல்வி நிரந்தரம் கிடையாது.. அதில் இருந்து மீண்டு வா என் தாயே" என்று போஸ்டரில் கூறப்பட்டுள்ளது.. இந்த போஸ்டரில் அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி, ராமதாஸ் ஆகியோரின் படம் இடம் பெற்றுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications