செங்கோட்டையனின் 'ரிவோல்ட்'.. இது மட்டும் நடக்கவே கூடாது! எடப்பாடி பழனிசாமிக்கு பறந்த அலர்ட்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: அதிமுகவுக்குள் நிலவி வந்த உட்கட்சி பூசல் தற்போது உச்சத்தை எட்டியிருக்கிறது. ஈரோட்டில் இன்று தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த விஷயத்தில் என்னதான் எடப்பாடி பழனிசாமி கவனமாக இருந்தாலும், சில தவறுகள் மட்டும் நடக்கவே கூடாது என அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.

கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், "10 நாட்களுக்குள் கட்சியிலிருந்து விலகி சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை எனில், நீக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து கட்சியை ஒருங்கிணைக்கும் வேலையை நான் செய்வேன்" என பேசியிருக்கிறார். இது எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்கெனவே இருந்த சிக்கலை அதிகரித்திருக்கிறது.

Edappadi Palaniswami Sengottaiyan AIADMK

செங்கோட்டையன் பவர்

அதாவது, "கடந்த 1989ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் செங்கோட்டையனின் பவர் என்ன என்பதை மொத்த அதிமுகவும் அறிந்துக்கொண்டது. அந்த தேர்தலில் அதிமுக அணி இரண்டாக பிளவுபட்டிருந்தது. ஒன்று ஜானகி தலைமையிலும், இன்னொரு அணி ஜெயலலிதா தலைமையிலும் அமைந்தது. அதில் ஜானகி தலைமையிலான அணி கடும் தோல்வியடைந்தது. அவர் போட்டியிட்ட தனது சொந்த தொகுதியில் தோல்வியடைந்தார். மறுபும் ஜெயலலிதா தலைமையிலான அணி 27 இடங்களை வென்றது.

கொங்கு மாவட்டத்தின் பலம்

ஈரோடு மாவட்டத்தில் திமுக மொடக்குறிச்சி சுப்புலட்சுமி கணேசமூர்த்தி இவங்கள மீறி, அதிக இடங்களை அதிமுகவுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது செங்கொட்டையன்தான். இந்த வெற்றி, ஜெயலலிதா அன்றைய எதிர்க்கட்சி தலைவராக உருவானதற்கு மிகப்பெரிய காரணமாகும். அப்படியான தனது பலத்தை இன்றைய கூட்டத்தின் மூலமாக செங்கோட்டையன் மீண்டும் நிரூபித்திருக்கிறார். அம்மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒன்றிய நகர செயலாளர் 90% இவர் பக்கம்தான் நின்றிருக்கிறார்கள். கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியால், இந்த கூட்டத்தையோ, செங்கோட்டையனையோ தடுக்க முடியவில்லை.

எடப்பாடியின் பலவீனம்

செங்கோட்டையனின் இந்த முயற்சி வெற்றி அடையாது என்றும், வீண் முயற்சி என்றும் எடப்பாடி ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் செங்கோட்டையனின் நகர்வு ஈரோட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு ஈரோட்டில் பலம் இருக்கிறது எனில் இந்த கூட்டத்தை நடக்க விடாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அல்லது வேறு யாராவது முக்கிய தலைவர்களை வைத்து, செங்கோட்டையன் ஸ்டாலினின் கைக்கூலி என்று அறிக்கை விட வைத்திருக்க வேண்டும்.

அப்படி நடந்திருந்தால் எடப்பாடியின் ஆதரவாளர்கள் எந்த அளவுக்கு செங்கோட்டையனின் நடவடிக்கை எதிர்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டே இருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

தவறு நடக்கக்கூடாது

ஏற்கனவே அதிமுக தொடர் தோல்வியில் இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டு விலகும் போது 13 சதவீத வாக்குகளை கட்சி இழந்தது. இப்பொழுது இருக்கக்கூடிய 20% வாக்குகளில் முக்கியமான வாக்கு வங்கியாக கொங்கு மண்டலம் இருக்கிறது. அந்த கொங்கு மண்டலத்தில் தவிர்க்க முடியாத தலைவராக செங்கோட்டையன் இருக்கிறார் என்பதை இன்றைய கூட்டம் நிரூபித்திருக்கிறது. ஆக இருக்கக்கூடிய 20% வாக்குகளை சரியாக காப்பாற்றிக் கொள்ள வேண்டும் எனில் இந்த விஷயத்தை மிக கவனமாக அணுக வேண்டியது எடப்பாடி பழனிசாமி பொறுப்பு.

நாங்கள் 6 பேர் சேர்ந்து எடப்பாடியை சந்தித்து, கட்சியை விட்டு நீக்கியவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம் என செங்கோட்டையன் கூறுகிறார். ஆனால் எடப்பாடி மறுக்கிறார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஏற்கனவே செங்கோட்டையன் கூறியிருந்த ஆறு பேர் லிஸ்டில் முதல் ஆளாக இவர் வெளியே வந்திருக்கிறார். மற்ற ஐந்து பேரில் வேறு யாராவது வெளியே வந்தால் அது எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும். அப்படி மட்டும் நடந்து விடவே கூடாது. அப்படி நடக்காமல் இருந்தால் ஈரோட்டுடன் மட்டுமே இந்த பாதிப்பு முடிந்துவிடும்" என்று அரசியல் விமர்சகர்கள் கூறியிருககின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+