ஈரோடு கிழக்கு ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் 9 மணியை கடந்தும் நடந்த வாக்குப்பதிவு.. காரணம் இதுதான்
ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் 9 மணியை கடந்தும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் திங்கள் கிழமை இரவு வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. ராஜாஜிபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் 200 மீட்டர் தூரத்துக்கும் மேல் வாக்காளர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். 6 மணிக்கு முன்பாக வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், இரவு 9 மணியைக் கடந்தும் வாக்குப்பதிவு நீடித்தது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வருகை தந்தனர். வாக்குச்சாவடி சீட்டு பெறாதவர்களுக்கும் அங்கேயே சீட்டுகள் வழங்கப்பட்டன. வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்தே ஓட்டுப்போட பொதுமக்கள் ஆர்வமாக வந்தனர்.

முதியோர்கள், நடக்க முடியாதவர்கள் கூட சக்கர நாற்காலிகளில் அழைத்து வரப்பட்டனர். பலரை கைத்தாங்கலாகவும் அழைத்து வந்து வாக்களிக்க வைத்தனர். இளம் வாக்காளர்கள், நடுத்தர வயதினர் என அனைத்து தரப்பினரும் உற்சாகமாக வந்து வாக்களித்தை காண முடிந்தது. போட்டிக் களத்தில் 77 வேட்பாளர்கள் இருந்ததால் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதனால், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஓட்டுப்பதிவு தாமதமானது. நேரம் செல்லச்செல்ல வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.காலை 9 மணி நிலவரப்படி 10.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இது பகல் 11 மணிக்கு 27.89 சதவீதமாக உயர்ந்தது. நேரம் செல்ல செல்ல வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை காண முடிந்தது.

குறிப்பாக ராஜாஜிபுரத்த்தில் உள்ள வாக்குச்சாவடியில் 200 மீட்டர் தூரத்துக்கும் மேல் வாக்காளர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். 6 மணிக்கு முன்பாக வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், இரவு 9 மணியைக் கடந்தும் வாக்குப்பதிவு நீடித்தது. நூற்றுக்கணக்கான பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்க நின்றதை காண முடிந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் பெண் வாக்காளர்கள் இடையே லேசான தள்ளுமுள்ளும் வாக்குவாதமும் ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் நிலைமையை சரி செய்தனர். தேர்தல் பார்வையாளரும் இந்த வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். 6 மணிக்கு மேல் வந்த 368 வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், சுமார் 9.15 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications