டிராமா பண்ண கூடாது! ராஜ்யசபாவில் டென்ஷனான தன்கர்! திரிணாமுல் எம்பி ஓ பிரைனை சஸ்பெண்ட் செய்து உத்தரவு
டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன், மழைக்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பதைப் பார்க்கலாம்.
தலைநகர் டெல்லியில் இப்போது ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. ஆம் ஆத்மி அங்கு ஆட்சியில் இருந்தாலும், டெல்லி ஒரு யூனிசன் பிரதேசம் என்பதால் போலீஸ் உள்ளிட்ட முக்கிய துறைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

இதற்கிடையே அங்கே அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான விவகாரத்தில் துணை நிலை ஆளுநருக்கும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், டெல்லி அதிகாரிகள் நியமன அதிகாரம் குறித்து மத்திய அரசு மசோதா ஒன்றைக் கொண்டு வந்தது..
மசோதா: லோக்சபாவில் ஏற்கனவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று ராஜ்யசபாவில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. இது தொடர்பான விவாதம் நேற்று சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. அதன் பிறகு இரவில் இந்த மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 131 வாக்குகள் பதிவான நிலையில், எதிராக 102 வாக்குகள் மட்டுமே பதிவானது. இதன் மூலம் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா மீது நடந்த விவாதத்தில் பல்வேறு எம்பிகள் பேசினர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையனும் இது குறித்துப் பேசினார். இந்த சட்டத்தின் மூலம் மத்திய அரசு ஜனநாயகத்தை சிதைப்பதாகத் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தில் இப்போது நிறைவேற்றப்படும் மசோதாக்களில் மூன்றில் ஒரு பங்கு கூட்டாட்சிக்கு எதிராகவே இருப்பதாகவும் அவர் சாடினார். மேலும், அவர் மணிப்பூர் விவகாரம் குறித்தும் சில கருத்துகளைத் தெரிவித்தார்.
டென்ஷன்: அப்போது குறுக்கிட்ட தன்கர் டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா குறித்து மட்டுமே பேசுமாறு தெரிவித்தார். இருப்பினும் ஓ பிரைன் தனது பேச்சைத் தொடர்ந்தார். அப்போது டெரிக் ஓ பிரைனை பார்த்து ஜக்தீப் தன்கர், "இதுவே உங்களுக்கு பேஷனாகிவிட்டது.. தொடர்ந்து இப்படிச் செய்கிறீர்கள். வெளியுலகில் விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறீர்கள்..
இங்கு என்ன டிராமா செய்யவா வந்தீர்கள்.. இதற்காகவே பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள்.. முதலில் உட்காருங்கள்.. இப்படியெல்லாம் செய்து பலன் தராது" என்றார். டெரிக் ஓ பிரைனை அப்போது அவையில் இருந்து வெளியேறவும் அவர் உத்தரவிட்டார். மேலும், அவரது பேச்சின் ஒரு சில பகுதிகளை நீக்கவும் தன்கர் உத்தரவிட்டார்.
சஸ்பெண்ட்: இதற்கிடையே ராஜ்யசபாவில் திரிணாமுல் எம்பி டெரிக் ஓ பிரையனை சஸ்பெண்ட் செய்து தன்கர் உத்தரவிட்டார். எஞ்சியிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து அவரை சஸ்பெண்ட் செய்து தன்கர் உத்தரவிட்டார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அவர் கூறிய சில கருத்துகளுக்காகவே அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
முன்னதாக அந்த விவாதத்தில் பேசிய பிரைன், எதிர்க்கட்சிகள் குடும்ப அரசியல் செய்வதாகக் குறிப்பிடும் பாஜகவுக்கு ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டுமே எம்பியாக முடியும் என்ற சட்டத்தைக் கொண்டு வரும் துணிச்சல் இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பினார். இப்போது தான் தன்கர் அவரது பேச்சு முடித்துக் கொள்ள வலியுறுத்தினார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications