Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சத்தியமங்கலமே துள்ளுது.. கிடாய் வெட்டி, சந்தனம் வைத்து பூஜை.. யாருக்குன்னு பாருங்க.. ஈர்க்கும் ஈரோடு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: சத்தியமங்கலத்தில் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. இதை சுற்றுவட்டார பகுதி மக்கள் திரண்டு வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து தினமும் காலை 6:40 மணிக்கு, அரசு பஸ் ஒன்று, திருப்பூர் வழியாக தேனி வரை சென்று வரும்.. இந்த பஸ்சில் தினமும் பண்ணாரி, ராஜநகர் ஆகிய ஊர்களில் இருந்து, கிட்டத்தட்ட 36 பயணிகள் இந்த பஸ்ஸில் கடந்த 10 வருடங்களாகவே தொடர்ந்து பயணம் செய்து வருகிறார்கள்.

Sathyamangalam Good news and 36 passengers celebrated by cutting Kidai with Pooja for the government bus

சத்தியமங்கலம்: அங்கிருந்து வேலையை முடித்து இந்த 36 பயணிகள் இந்த பஸ்சில் ஏறி இரவு 10 மணி அளவில் சத்தியமங்கலத்துக்கு வருகின்றனர். இவர்கள் அனைவருமே, திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள்.. 10 வருடமாகவே, இந்த பஸ்ஸில்தான் வேலைக்கு சென்று வருகிறார்கள். இந்த பஸ் இவர்களுக்கு மிகவும் சவுகரியமாக இருந்து வருகிறது.

இந்த பஸ், எப்போதுமே லேட்டாக வருவதில்லை.. சரியான நேரத்திற்கு வந்துவிடுவதால், இவர்கள் எல்லாருமே தினமும், திருப்பூருக்கு சரியான நேரத்தில் வேலைக்கு சென்று வருகிறார்கள்.. இதன்காரணமாக, 36 பயணிகளும் இந்த பஸ்ஸூக்கு வருடா வருடம் கிடாய் வெட்டி பூஜை செய்வார்கள். ஆடி மாதம் வந்தாலே, 36 பயணிகளும் சேர்ந்து இந்த அரசு பஸ்சிற்காக கிடாய் வெட்டி சிறப்பு பூஜைகளை செய்வார்கள்.

நெகிழ்ச்சி சம்பவம்: ஆனால், 3 வருடங்களாகவே கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தால், இந்த கடாய் வெட்டி கொண்டாடும் நிகழ்ச்சியை நடத்தாமல் இருந்தனர். இந்நிலையில், இந்த வருடம், கிடாய் வெட்டி அசத்திவிட முடிவு செய்தார்கள். இதற்காக 36 பயணிகளும் சேர்ந்து இன்றைய தினம் கிடாய் ஒன்றை வாங்கி வந்தனர்..

Sathyamangalam Good news and 36 passengers celebrated by cutting Kidai with Pooja for the government bus

சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்த பஸ் பண்ணாரி வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போதுதான், அங்கு பஸ் ஏற வந்த தொழிலாளர்கள் பஸ்ஸை நிறுத்திவிட்டு இவ்வளவு மரியாதையையும் செய்தனர்.

அசத்தல் காரியம்: அந்த அரசு பஸ்சுக்கு மாலை அணிவித்து, சந்தனம் வைத்தனர்.. பிறகு பஸ் முன்பு பூஜை நடத்தி, கிடாயும் வெட்டினர்... அந்த பஸ்ஸூக்கு திருஷ்டி கழிப்பதற்காகவே, இப்படி வருடா வருடம் கிடாய் வெட்டி பூஜை செய்வார்களாம். இதில் ஏராளமான அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களும், அந்த பகுதியிலுள்ள பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+