தமிழ்நாடு மட்டும் இளக்காரமா ப்ரோ.. புதுச்சேரிக்கு சொன்ன நேரத்திற்கு வந்த விஜய்.. ஈரோட்டில் அலட்சியம்
ஈரோடு: புதுச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு விஜய் சரியான நேரத்திற்கு வந்த நிலையில் ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு 11 மணி ஆகியும் இன்னும் வரவில்லை. விஜயின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
கரூர் சம்பவம் நடந்த 73 நாட்களுக்கு பின் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பை நடத்தினார். சரியாக கூட்டம் நடத்தும் இடத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே வந்தார். ஆனால் விஜய் கூட்டம் ஆரம்பிக்க வேண்டிய இடத்திற்கு முன்பே வந்தாலும்.. 10.30 மணி நேரத்தை தாண்டியும் விஜய் பேசாமல் வாகனம் உள்ளேயே இருந்ததால் போலீசார் கோபம் அடைந்தனர். இதையடுத்து போலீஸ் தவெக கட்சிக்கு எச்சரிக்கை விடுத்தது. விஜயை பேசிவிட்டு செல்ல சொல்லுங்கள் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
விஜய் புதுச்சேரி
போலீசார் தவெக நிர்வாகிகளிடம் நேரடியாக விஜயிடம் சென்று.. நீங்கள் பேசுங்கள் என்று கூறி உள்ளனர். அதன்பின் தவெக தலைவரான புஸ்ஸி ஆனந்திடம்.. நீங்கள் விஜயிடம் பேசிவிட்டு செல்ல சொல்லுங்கள். மக்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. 40 பேர் இறந்திருக்கிறார்கள்.. நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்லாதீர்கள.. என்று புஸ்ஸி ஆனந்த்திடம் காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங் கோபமாக கத்தினார்.

15 நிமிடங்களுக்கு முன்பே விஜய் வந்துவிட்டார். ஆனால் அவர் பேசவில்லை. கேரவன் உள்ளேயே விஜய் இருந்தார். புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டத்திற்கு அரங்கு அமைக்க அனுமதி அளிக்கப்படாத சூழலில், விஜய்யின் பிரச்சார வாகனம் மீது நிரந்தர மைக் பொருத்தப்பட்டுள்ளது. விஜய் உள்ளேயே இருந்துகொண்டு பேசாமல் இருந்தார் . இதையடுத்தே போலீஸ் கோபம் அடைந்து.. அவரை பேசிவிட்டு செல்ல சொல்லுங்கள் என்று கோபமாக கூறினர்.கணக்குப்படி விஜய் 12.30 மணிக்கு புதுச்சேரியை விட்டே சென்று இருக்க வேண்டும். அதுவரைதான் அவருக்கு அனுமதியே வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் விஜய் நேரம் கடந்தும் விஜய் வராமல் காலம் தாழ்த்தினார் என்பதால் போலீசார் அவரை கண்டித்தனர். அதன்பின் சரியாக பேசிவிட்டு அங்கிருந்து விஜய் சென்றார்.
தமிழ்நாடு தாமதம்
புதுச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு விஜய் சரியான நேரத்திற்கு வந்த நிலையில் ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு 11 மணி ஆகியும் இன்னும் வரவில்லை. விஜயின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
11 மணி கூட்டத்திற்கு 6 மணியில் இருந்தே மக்கள் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் காத்திருந்தனர். விஜய் 10.30 மணிக்குத்தான் கோவையில் இருந்தே வாகனத்தில் கிளம்பினார். அதுவும் மிகவும் மெதுவாக வாகனம் ஊர்ந்து வந்தது. கூட்டத்தை அழைத்துக்கொண்டு விஜய் வாகனத்தில் மெதுவாக வந்தார். 11 மணி முதல் 1 மணிக்குள் கூட்டம் நடத்தி முடிக்க வேண்டும் என போலீசார் நிபந்தனை விதித்து இருந்தனர். இதனால் விஜய் சரியான நேரத்தில் பேசுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications