ஆமா முதல்வருக்கு லவ் டுடே படம் பார்க்க நேரமிருக்கு.. வெள்ளத்தை பார்க்க நேரமில்லையா? அண்ணாமலை
ஈரோடு: முதல்வர் ஸ்டாலினுக்கு லவ் டுடே படம் பார்க்க நேரமிருக்கிறது. ஆனால் வெள்ளத்தை பார்க்க நேரமில்லையா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அவர் பேசுகையில் இந்த ஆர்ப்பாட்டம் என்பது காலத்தின் கட்டாயம், ஏன்னு கேட்டீங்கன்னா, முதல்வர் காலையில் எழுந்தவுடன் எந்த பொருளின் விலையை ஏற்றலாம் என யோசிக்கிறார்.

மத்திய அரசு
பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைத்தும் அதை மாநில அரசு குறைக்கவில்லை. 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தை போல தமிழகத்தில் அனைத்து படங்களையும் உதயநிதி ஸ்டாலினே வாங்குகிறார். மகன் வெளியிட்ட லவ் டுடே படத்தை முதல்வர் ஸ்டாலின் 3 மணி நேரம் உட்கார்ந்து பார்த்துள்ளார்.

சென்னை வெள்ளம்
ஆனால் சென்னை வெள்ளத்தை கவனிக்க அவருக்கு நேரமில்லை. அமுல் நிறுவனத்தில் வரும் லாபத்தில் 82 சதவீத விவசாயிகளுக்கு சென்றடைகிறது. ஆனால் ஆவின் நிறுவனம் இப்படி செய்யவில்லை. அதனால் ஆவின் நிறுவனம் நஷ்டமடைகிறது. பால் உற்பத்தியில் வரும் லாபம் விவசாயிகளை சென்றடைய வேண்டும். சென்னையில் சிறிதளவு பெய்த மழைக்கே தண்ணீர் தேங்கியது.

டிசம்பர் மாதம் மழை
இன்னும் டிசம்பர், ஜனவரி மாதங்களில்தான் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான குற்றவாளியை முதல்வர் கொண்டாடினார். கோவை கார் வெடிப்பை பற்றி நாங்கள் பேசவில்லை என்றால் தீபாவளி பண்டிகைக்கு துணி மணி வாங்க வந்த மக்கள் நிறைய பேர் இறந்திருப்பார்கள்.

2024 ஆம் ஆண்டு 25 எம்பிக்கள்
நாங்கள் குரல் கொடுத்ததால்தான் இந்த வழக்கிலிருந்து சில விஷயங்கள் வெளியே வந்தது. குற்றவாளிகள் அடுத்தடுத்து கைதாகினர். வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெருமளவு வெல்லும். தமிழகத்தில் இருந்து 25 எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு தமிழகத்திலிருந்து செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.

39 எம்பி தொகுதிகள்
அதாவது தமிழகத்தில் இருப்பது 39 நாடாளுமன்றத் தொகுதிகள். அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அது போல் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதிமுக தலைமையில் என்றால் நிச்சயம் அதிமுக 25 இடங்களுக்கு குறையாமல் போட்டியிடும். மீதமுள்ள 14 இடங்களைத்தான் கூட்டணி கட்சிகளுக்கு கொடுப்பர். ஆனால் அண்ணாமலையோ இன்றைய ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திலிருந்து 25 பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் என்கிறார். இது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களில் யார் தனித்து போட்டியிட போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்! -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்!












Click it and Unblock the Notifications