மனித கழிவை மனிதனே அள்ளும் கொடுமையால்.. இந்தியாவில் யாரும் சாகவில்லை.. மத்திய அரசு பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கைகளால் மலம் அள்ளும் கொடுமையால் யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

ஆனால், "சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்துக்களால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 330 பேர் உயிரிழந்துள்ளனர்" என்று ராம்தாஸ் அத்வாலே ஒப்புக்கொண்டுள்ளார்.

அதேபோல கைகளில் மலம் அள்ளும் கொடுமை நாடு முழுவதும் எங்கும் நடக்கவில்லை என்றும் அவர் தனது விளக்க உரையில் விரிவாக கூறியுள்ளார்.

கைகளால் மலம் அள்ளும் கொடுமை

கைகளால் மலம் அள்ளும் கொடுமை

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடும் அமளிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) எம்பி கிரிஷ் சந்திரா "நாடு முழுவதும் கைகளால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் நிலை" குறித்து கேள்வியெழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, கைகளால் மலம் அள்ளும் கொடுமையால் யாரும் உயிரிழக்கவில்லை என விளக்கமளித்துள்ளார்.

சட்டம்

சட்டம்

மேலும், சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்துக்களால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 330 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ராம்தாஸ் அத்வாலே ஒப்புக்கொண்டுள்ளார். கைகளால் மலம் அள்ளுவதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறு மறுவாழ்வு சட்டம், 2013 (MS சட்டம், 2013) பிரிவு 2 (1) (g)-ன் படி நாட்டில் யாரையும் கைகளால் மலம் அள்ளுவதற்காக பணியில் அமர்த்த முடியாது. என்றும் அவர் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டம் 6.12.2013 தேதியிலிருந்து அமலில் உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தூய்மை இந்தியா

தூய்மை இந்தியா

அதேபோல மேற்குறிப்பிட்டவாறு கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளில் உயிரிழந்த 330 பேரில் 47 பேர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இதுதான் அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 43 பேரும், டெல்லியில் 43 பேரும், ஹரியானாவில் 34 பேரும் உயிரிழந்துள்ளனர். 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் அக்டோபர் 2, 2014 முதல், கிராமப்புறங்களில் 10.99 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

மறுவாழ்வு

மறுவாழ்வு

மேலும், "நகர்ப்புறங்களில் உள்ள 62.65 லட்சத்திற்கும் அதிகமான தூய்மையற்ற கழிப்பறைகளை தூய்மையான கழிப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன. கைகளால் மலம் அள்ளும் கொடுமையை முடிவுக்கு கொண்டுவர இந்த திட்டப் பணிகள் பெரும் பங்காற்றின. கைகளால் மலம் அள்ளுபவர்களின் மறுவாழ்வுக்காக அரசு பங்காற்றி வருகிறது. அவர்கள் சுயமாக வாழ சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒரு முறை தொகையாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படுகிறது. மட்டுமல்லாது இந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகையுடன் இரண்டு ஆண்டுகள் வரை திறன் மேம்பாட்டுப் பயிற்சியையும் அரசு வழங்குகிறது" என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+