பேரன்புகள் ஈரோடு நடத்துனரே..முடியை பிடித்து இழுத்ததால் உயிர் தப்பிய மாணவி.. வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு to மேட்டூர் செல்லும் தனியார் பேருந்தில் நடத்துனரின் துரிதமாக செயல்பட்டு மாணவியின் உயிரை காப்பாற்றி உள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது..

தமிழகத்தை பொறுத்தவரை அரசு அல்லது தனியார் பேருந்துகளில் பொதுவாக கதவுகள் இருக்காது. திறந்த நிலையில் தான் இருக்கும். மலைப்பகுதிகளில் செல்லும் பேருந்துகளிலும், சென்னைக்குள் செல்லும் நவீன பேருந்துகளில் மட்டுமே கதவுகள் இருக்கும்.

The conductor saves the student in a private bus going from Erode to Mettur

தமிழகத்தில் மற்ற பகுதிகளில் உள்ள பேருந்துகள் அதிவேகமாக செல்லும் போது, சில நேரங்களில் பிரேக் பிடிப்பார்கள். அப்படி பிரேக் பிடிக்கும் போதோ அல்லது ஏதேனும் வாகனம் வரும் போது வேகத்தை குறைக்கும் போதே, பேருந்தின் படிக்கெட்டை ஒட்டிய பகுதிகளில் நின்று இருப்போர் கம்பியை பிடிக்காமல் இருந்தால் தவறி விழுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

ஏன் சில சமயங்களில் அரசு பேருந்து அல்லது தனியார் பேருந்துகளில் கம்பியை பிடிக்காமல் போய் விழுந்த நிகழும் நடந்துள்ளது. அண்மையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேஓடும் பேருந்தில் கணவன் தாக்க முயன்ற போது, தப்பிக்க கம்பியை பிடிக்காமல் நகர்ந்த பெண் கீழே விழுந்து உயிரிழந்தார்.

இதேபோல் முன்னதாக ஒரு பெண் ஓடும் பேருந்தில் இறங்க முயன்ற போது தவறி விழுந்த உயிரிழந்தார். மேலும் ஓடும் பேருந்து நிற்பதற்குள் இறங்குவதற்காக வந்த பெண்ணும் இதேபோல் ஒரு முறை விழுந்துள்ளார். அப்படித்தான் ஈரோடு பகுதியில் நடந்துள்ளது. நல்லவேளையாக நடத்துனர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றி உள்ளார்.

ஈரோட்டில இருந்து மேட்டூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பெண் ஒருவர் இறங்க வேண்டும் என்று நினைத்து பேருந்தின் முன்பக்கத்தில் படியை ஒட்டி வந்து கொண்டிருந்தார். திடீரென கண் இமைக்கும் நேரத்தில் பேருந்தில் இருந்து தவறி விழப்போனார். உடனே நடத்துனரின் துரிதமான மற்றும் மிக கவனமான செயலால் அந்த மாணவியின் உயிர் காப்பாற்றபட்டுள்ளது. முடியை பிடித்து இழுத்து காப்பாற்றியது வலிக்கிறதா? என தொட்டு பார்த்து கேட்டார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.. இதை பலரும் பாராட்டி வருகிறார்கள். இதுபற்றி கருத்து தெரிவித்த நெட்டிசன் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார். இருப்பினும் கேரளாவைப் போல அனைத்துப் பேருந்துகளிலும் கதவுகளை அடைத்த பின்பே இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+