பைக்கில் கேஷூவலாக வந்த தம்பதி.. சடார்னு பாய்ந்த புலி.. ஈரோடு சத்தியமங்கலத்தில் அதிர்ச்சி சம்பவம்,
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், வாகனங்களை மலைப் பாதையில் நிறுத்த வேண்டாம், வன விலங்குகளை தொந்தரவு செய்ய வேண்டாம், பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள வேண்டாம் உள்ளிட்ட முக்கிய அறிவுரைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என வனத் துறையினர் வலியுறுத்தியபடியே உள்ளனர்.. இந்நிலையில், இணையத்தில் ஒரு பகீர் வீடியோ வெளியாகி, காண்போரை பதற செய்து வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் இருக்கின்றன.. இங்கு புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.
திம்பம் மலைப்பாதை
தமிழக - கர்நாடகா இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். எனினும், இரவு நேரங்களில் இந்த பாதைகளில் யானை, புலி, சிறுத்தைகள் நடமாடுவது வழக்கமாகிவிட்டது..
சிலசமயம் தண்ணீர் தேடி இரவு நேரத்தில் சாலையை கடக்கும்போது, இந்த விலங்குகள் அவ்வப்போது வாகனங்களில் அடிபட்டு, இறந்துபோகும் பரிதாபங்களும் நடக்கின்றன.
எனவேதான், அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் தேசிய நெடுஞ்சாலை செல்வதால், வனவிலங்குகள் சாலையை கடப்பதை வாகன ஓட்டிகள் தெரிந்துகொள்வதற்காகவே சாலையின் 2 பக்கங்களிலும் 12 மீட்டர் தூரத்துக்கு அடிக்கடி சுத்தம் செய்யப்படுகின்றன.. இதன்காரணமாக வனவிலங்குகள் சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு பலியாவதும் இறப்பது கணிசமாக குறைந்து வருகிறது.
சுவரில் உட்காரும் சிறுத்தைகள்
எனினும், இரவுகளில் சாலையோர தடுப்பு சுவரில் சிலசமயம் சிறுத்தைகள் உட்கார்ந்திருக்கும் போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகி, திம்பம் மக்களுக்கு பீதியை தந்துவிடுகிறது..
அதனால்தான், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிக கவனத்துடன் செல்ல வேண்டும், குறிப்பாக வாகனங்களை நிறுத்தி இறங்குவது, வன விலங்குகளை அருகில் பார்ப்பது, போட்டோ எடுப்பது போன்ற செயல்கள் மிகவும் ஆபத்தானவை என்றும் அவ்வப்போது வனத்துறையினர் எச்சரித்தபடியே உள்ளனர்.
பைக்கில் வந்த தம்பதி
இந்நிலையில் சத்தியமங்கலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. அதாவது, காட்டுப்பகுதியில் இருந்து புலி ஒன்று வெளியேறியிருக்கிறது.. அந்த புலி பண்ணாரியில் இருந்து திம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து உட்கார்ந்து விட்டது.. சாலையோரத்தில் கெத்தாக உட்கார்ந்து கொண்டிருந்த புலியை பார்த்து, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால், புலி சாலையில் உட்கார்ந்திருப்பது தெரியாமல், திம்பத்தில் இருந்து சத்தியமங்கலத்துக்கு ஒரு தம்பதி பைக்கில் பண்ணாரி அருகே வந்து கொண்டிருந்தனர்.. திடீரென புலி அவர்களை நோக்கி பாய்தது. புலியை பார்த்ததுமே பதறிப்போன அந்த பெண், பைக்கில் இருந்து கீழே குதித்தார்.
உடனே உறுமிக்கொண்டே புலி அவர்களை நோக்கி சென்றது.. தம்பதி இருவருமே அலறி கத்தினார்கள்.. ஆனால் இவர்கள் அலறல் சத்தத்தை கேட்டதுமே அந்த புலி காட்டுக்குள் சென்று விட்டது. இதனால் தம்பதி இருவருமே உயிர் பிழைத்தனர்.. உடனடியாக பைக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து பறந்து சென்றார்கள்..
பீதியை கிளப்பும் வீடியோ
இந்த சம்பவத்தை அந்த வழியாக காரில் வந்து கொண்டிருந்த நபர் ஒருவர், தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டார்.. அந்த வீடியோவை பார்த்து இணையவாசிகள் நடுநடுங்கி போய்விட்டனர்..
திம்பம் மலைப்பாதையில் யானைகள், சிறுத்தைகள் மட்டுமே அடிக்கடி சுற்றித்திரியும் என்றாலும், பொதுமக்கள் மீது பாய்ந்தது கிடையாது. ஆனால் இப்போது சாலையோரத்திலிருந்து, தம்பதியை நோக்கி புலி பாய்ந்து வந்துள்ளது, சத்தியமங்கலம் வாகன ஓட்டிகளிடையே பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது,
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications