விஜய் – அதிமுக கூட்டணியா.. செங்கோட்டையன் சொன்ன பதிலை பாருங்க.. தவெக டிவிஸ்ட்
ஈரோடு: தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் ஈரோடு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு தமிழ்நாட்டில் விஜய் கலந்து கொள்ளும் முதல் பொதுவெளி நிகழ்ச்சி என்பதால், அது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் கவனித்து வருகிறார். இந்நிலையில் அதிமுக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு செங்கோட்டையன் அளித்துள்ள பதில் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தவெக தலைவர் விஜய் டிசம்பர் 18 ஆம் தேதி (நாளை மறுநாள்) ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால், கொங்கு மண்டலத்தில் விட்ட பெயரை சரி செய்யும் விதமாக விஜய்யின் ஈரோடு விசிட்டை தவெக திட்டமிட்டு வருகிறது.

தவெகவில் முன்னாள் அமைச்சர்கள்
இந்நிலையில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், விஜய் வருகை வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக இருக்க போகிறது. இந்த கூட்டத்தில் பாஸ் எதுவுமில்லை. நாங்கள் யாரையும் வர வேண்டாம் என்று கூறவில்லை. காவல்துறை விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும். 20 இடங்களில் சின்டெக்ஸ் மூலம் தண்ணீர் வழங்கப்படும். 1 லட்சம் தண்ணீர் பாட்டீல்கள் வழங்கப்படும்.
காவல்துறை டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அனைத்து மக்களும் வரலாம். ஈரோடு மாவட்டம் வருகைக்கு பிறகு விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த மாவட்டங்களில் பயணிக்கவுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் யாராவது தவெக வருகிறார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் இருந்துதான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதிமுகவுடன் கூட்டணியா
25,000 பேர் பங்கேற்க கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக வீடு திரும்புமளவுக்கு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளன. விஜய் விருப்பப்பபட்டால் அடுத்தடுத்து அவரின் பயணத்தை வகுத்து நான் ஒருங்கிணைப்பேன்." என்றார். அவரிடம் செய்தியாளர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு செங்கோட்டையன், "உங்கள் திறமையை காட்டுவதற்கான என்னை மடக்கி கேள்வி கேட்காதீர்கள். உங்கள் தலைமைக்காக ஏதாவது ஒரு செய்தியை போட்டுவிட வேண்டாம்." என்றார். அவரிடம், "அதிமுக - பாஜகவுடன் தவெக கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதா?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், "தேர்தல் களம் எப்படி செல்லும் என்று யாராலும் யூகிக்க முடியாது.
செங்கோட்டையன் பதிலால் டிவிஸ்ட்
அரசியல் நிலவரங்களை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்." என்று கூறினார். இதற்கு முந்தைய செய்தியாளர் சந்திப்புகளில், தவெக - அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு, "விஜய் தான் முடிவு செய்வார்" என்று கூறிவந்த செங்கோட்டையன் தற்போது பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Z பாதுகாப்பை கூட நம்ப மாட்டார்? விஜய் நம்பும் ஒரே ஆள் நயீம் மூஸா! முதல்வரின் இடது கை! யார் இவர்? -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications