Erode TVK Meeting: 40 அடி பேனரில் முள்கம்பி.. விஜய் ரசிகர்களை கட்டுப்படுத்த செங்கோட்டையன் அதிரடி
ஈரோடு: தவெக தலைவர் விஜய் வருகிற 18 ஆம் தேதி ஈரோடு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு தமிழ்நாட்டில் விஜய் கலந்து கொள்ளும் முதல் பொதுவெளி நிகழ்ச்சி இது. இதற்கு முன்பு நடைபெற விஜய் நிகழ்ச்சிகளில் ரசிகர்கள், தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் எக்கச்சக்க சொதப்பல்கள் நிகழ்ந்தன. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தனியார் துணிக்கடையின் 40 அடி விளம்பர பலகை உள்ளது. விஜய் ரசிகர்கள் அதில் ஏறாமல் இருக்கும் வகையில் விளம்பர பலகை முள் கம்பியால் சுற்றப்படும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அரசியல் கட்சிகள் தங்களின் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது.

தவெக கூட்டம்
ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணியும் பலத்த வியூகங்களை வகுத்து வருகின்றன. நாம் தமிழர், தவெக கட்சிகளும் மல்லுகட்டி வருகின்றன. திமுகவிடம் இருந்து எப்படியாவது ஆட்சியை பிடிக்க தவெக காய் நகர்த்தி வருகிறது. மாற்று கட்சிகளில் உள்ள சீனியர் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்து வருகிறார்கள்.
ஜனநாயகன் படத்துடன் சினிமாவில் இருந்து விலகி, தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். தொகுதி வாரியாக மேற்கொண்ட பிரச்சாரத்தின் தொடக்கத்திலேயே சிக்கல் ஏற்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் கரூர் தவெக கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு தவெக மற்றும் விஜய்யின் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டது.
விஜய் ஈரோடு விசிட்
கரூர் கூட்ட சம்பவத்திற்கு பிறகு, விஜய் தமிழ்நாட்டில் பெரிய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சேலத்தில் அனுமதி கேட்கப்பட்ட நிலையில், காவல்துறை அனுமதி மறுத்தது. கடந்த வாரம் புதுச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார். இந்நிலையில் விஜய் டிசம்பர் 18 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் வரவுள்ளார். விஜயமங்கலம் அருகே நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
கொங்கு மண்டலத்தில் விட்ட பெயரை, அதே கொங்கு மண்டலத்தில் சரி செய்யும் விதமாக விஜய்யின் ஈரோடு விசிட்டை தவெக திட்டமிட்டு வருகிறது. அரசியலில் அனுபவமிக்க செங்கோட்டையன் இதற்கான பணிகளை பக்காவாக வகுத்து வருகிறார். காவல்துறை ஏராளமான நிபந்தனைகளை விதித்துள்ளது. விஜய்யின் ஈரோடு விசிட் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அடிப்படை வசதிகள்
இந்நிலையில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம், "தவெக பொதுக்கூட்டத்தில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஆனால் காவல்துறை விதிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விதிகளுக்குட்பட்டு செய்ய வேண்டிய பணிகளை சிறப்பாக செய்வோம்.
இதற்காக குடிநீர், பாதுகாப்பு அரண், கழிவறை, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், கண்காணிப்பு கேமராக்கள், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படும். இதுவரை தமிழகத்தில் காணாத அளவுக்கு மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் அளவுக்கு தலைவருக்கு வரவேற்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு இனி முன் உதாரணமாக அமையுமளவுக்கு அனைவரும் ஒருங்கிணைந்து இந்தப் பணிகளை செய்கிறோம். என்றார்.
முள்வேலி
விஜய்யின் கடந்த கூட்டங்களில் அவரை சந்திப்பதற்காக மரங்கள், கட்டிங்கள், கூரைகள், பேனர்களில் அவரின் ரசிகர்கள் தொங்கினார்கள். இதுவும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தியிருந்தது. ஈரோடு பொதுக்கூட்டத்தில் தனியார் துணிக்கடையின் 40 அடி உயர விளம்பர பலகை இருப்பதை சுட்டிக்காட்டி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.
அதற்கு செங்கோட்டையன், தவெக தொண்டர்படை சார்பாக சுமார் 1,000 பேர் பாதுகாப்புப் பணிகளில் இருப்பார்கள். காவல்துறை அவர்களின் தேவைக்கேற்ப அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் சீருடையுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். தொண்டர்கள் பேனர்களில் ஏராதளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விளம்பர பலகையை சுற்றி முள்கம்பி சுற்றப்பட்டும். அந்த இடத்தில் தொண்டர் படையைச் சேர்ந்த 5 பேர் கண்காணிப்புப் பணியில் இருப்பார்கள். என்றார்.
-
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு.. ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? வெளியான ஷாக் தகவல்! -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம் -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள்.. விஜயிடம் கடனாளிகள் ஆனது எப்படி? உண்மையான காரணம் என்ன?












Click it and Unblock the Notifications