Sengottaiyan: சட்டைப் பையில் ஜெயலலிதா படம்.. தவெக கரை வேட்டி.. முதல் ஆளாக ஈரோடு கூட்டத்திற்கு வந்த செங்கோட்டையன்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், பொதுக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்த செங்கோட்டையன் இன்று காலையிலேயே வந்து முன்னேற்பாடுகளை பார்வையிட்டார். தவெகவில் சேர்ந்த பிறகும் சட்டைப் பையில் ஜெயலலிதா புகைப்படத்தை தொடர்ந்து வைப்பேன் எனக்கூறிய செங்கோட்டையன், இன்று பொதுக்கூட்டத்திற்கும் மறக்காமல் ஜெயலலிதா புகைப்படத்தை வைத்து இருந்தார்.

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு நடைபெறும் முதல் பொதுக்கூட்டம் என்பதால் இந்த கூட்டத்திற்கு தவெகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

tvk-functionary-sengottaiyan-keeps-jayalalithaa-photo-close-carrying-it-in-his-shirt-pocket

விஜய் பொதுக்கூட்டம்

வாகன நிறுத்தத்திற்கு மட்டும் 80 ஏக்கர் பரப்பளவில் இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு அவரது பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டம் என்பதால் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். இதனால், பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முன்னின்று கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார்.

காலையிலேயே வந்த செங்கோட்டைன்

பொதுக்கூட்ட மைதானத்திற்கு அனுமதி பெறுவது முதல் ஏற்பாடுகள் வரை அனைத்தையும் செங்கோட்டையன் மற்றும் ஈரோடு மாவட்ட தவெக நிர்வாகிகள் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறார்கள். நேற்றே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு வரை பொதுக்கூட்ட ஏற்பாடுகளை செங்கோட்டையன் பார்வையிட்டு வந்தார்.

சட்டைப் பையில் ஜெயலலிதா புகைப்படம்

இந்த நிலையில் இன்று காலை முதல் ஆளாக வந்த செங்கோட்டையன் இறுதிக்கட்ட ஏற்பாடுகளை பார்வையிட்டார். தவெக கரை வேட்டி கட்டியிருந்த செங்கோட்டையன் , சட்ட பையில் வழக்கம் போல ஜெயலலிதா புகைப்படமே வைத்து இருந்தார். தவெகவில் இணைந்த பிறகும் ஜெயலலிதா புகைப்படமே தொடர்ந்து வைத்துக்கொள்வேன் என்று செங்கோட்டையன் கூறியிருந்தது நினவு கொள்ளத்தக்கது.

வேட்டியை அணியக்கூடாது என

நான் 50 ஆண்டுகளுக்கு மேல் அதிமுகவில் இருந்திருக்கிறேன். கட்சிக்காக உண்மையாக உழைத்தேன். ஜெயலலிதாவால் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறேன். தற்போது தூய்மையான அரசியலுக்காக தவெகவில் இணைந்துள்ளேன். அதிமுக கலர் கொண்ட வேட்டியை அணியக்கூடாது என்று வழக்கு போட்டுள்ளார்கள். இல்லையென்றால் அதையும் அணிந்து இருப்பேன்.

என்னுடைய சட்டைப் பையில் நான் மதிக்கும் ஜெயலலிதா புகைப்படத்தை வைப்பது என்பது என்னுடைய உரிமை" என்று செங்கோட்டையன் அப்போது விளக்கம் அளித்து இருந்தார்.

டென்ஷன் ஆன செங்கோட்டையன்

செங்கோட்டையன் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்ததும் தவெக தொண்டர் படையினரை உள்ளூர் நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து தேவையான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் கொடுத்தார். அப்போது தொண்டர் படையினரை பார்த்து எங்கே ஓடுறீங்க.. ஒரே கலரில் நில்லுங்கள்.. ஹெட் யாரு.. எங்கே இருக்கார் அந்த ஆளு.. சீக்கிரம் வர சொல்லுப்பா.. என்று டென்ஷன் ஆனார். காலையில் இருந்தே பரபரப்பாக செங்கோட்டையன் முன்னேற்பாடு பணிகளை செய்து வருவதையும் பார்க்க முடிகிறது.

2000 போலீசார் பாதுகாப்பு

இதற்கிடையே, பொதுக்கூட்டத்தில் காலை 11 மணிக்கு விஜய் வருவகை தருவார் என எதிபார்க்கப்படும் நிலையில் காலையில் இருந்தே பொதுக்கூட்ட திடலில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால், எங்கு பார்த்தாலும் தொண்டர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருவதால், போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தவெக தொண்டர்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருப்பதால் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் தற்போதே உற்சாகம் களை கட்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+