"நான் கொடுத்து வைத்திருக்கணும்"! 50 வயது விஜய்க்காக உருகிய 50 ஆண்டு அரசியல் அனுபவசாலி செங்கோட்டையன்
ஈரோடு: தவெக தலைவர் விஜய்யுடன் பணியாற்ற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தொண்டர்கள் மத்தியில் உருக்கமாக பேசியிருந்தார்.

கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு செங்கோட்டையன் தலைமை வகித்தார். அப்போது அவர் நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில், "எதிர்கால தமிழகத்தை ஆளப்போகிற தமிழக மக்கள் விரும்புகின்ற எதிர்காலத்தில் தமிழகத்தில் நல்லாட்சி அமைப்பதற்கு முக்கியமான ஒன்றாக உள்ளது.
இந்தியாவில் கூடுதலாக 69 லட்சம் பேர் வாக்குகள் என்றவுடன் பீகாரில் போராட்டங்கள் நடந்தன. தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அப்போது அனைவரும் சொன்னார்கள், செங்கோட்டையன் எங்கு சென்று சேர்ந்திருக்கிறார் என்று, நான் சேர்ந்துள்ள இடம் கோட்டைக்கு செல்லும் இடமாக உள்ளது.
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் பயணங்களை மேற்கொண்டேன். இரு தலைவர்களுடன் பணியாற்றி பிறகு மூன்றாவது தலைவரோடு பணியாற்றுகிற வாய்ப்பு எனக்கு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மனம் திறந்து பேசினார்.
விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். களப்பணி என்பது முக்கியமான ஒன்று. அனைத்து இடங்களிலும் கழக தலைவருடைய புகழை மக்களே பரப்பி வருகிறார்கள்.
எப்போது தேர்தல் வந்தாலும் நாம் தயாராக இருக்கிறோம் என்ற நிலைதான் தமிழகத்தில் உள்ளது. வேறு இயக்கமாக இருந்தால் தேடி போய் வாக்குகளை சேகரிக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால் வாக்களிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், தேர்தல் தேதியை சொல்லுங்கள், சின்னத்தை சொல்லுங்கள் என்கின்றனர். நேரடியாக விமானத்தில் செல்லுகிற இயக்கமாக தமிழக வெற்றிக் கழகம் உள்ளது" என செங்கோட்டையன் உருக்கமாக பேசியிருந்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தவெகவில் இணைந்துள்ளார். 77 வயதான அவர் விஜய் கட்சியில் இணைந்துள்ளதால் அங்கு உரிய மரியாதை கிடைக்குமா என்ற விமர்சனம் எழுந்தது. ஈரோடு பொதுக் கூட்டத்தில் கூட விஜய் ஏன் தனியாக வாகனத்தில் ஏறி பேசுகிறார்? ஒரு மேடை அமைத்து கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என விமர்சனங்கள் எழுந்தன.
எம்ஜிஆர், அதிமுகவை கட்சி தொடங்கியதும் பொதுக் கூட்டத்தை சிறப்பாக நடத்தியமைக்காக எம்ஜிஆரால் பாராட்டப் பெற்றவர் செங்கோட்டையன். அது போல் ஜெயலலிதாவின் பயண திட்டங்களை சிறப்பாக வகுத்து அவரின் குட் வில் புக்கில் இடம்பெற்றிருந்தவரும் ஆவார். அப்படி இரு ஜாம்பவான்களால் பாராட்டப்பட்ட செங்கோட்டையன் இன்று விஜய் கட்சியில் இணைந்துள்ளார்.
அவரோ மக்களை சந்திப்பதில்லை. கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கூட நேரில் வரவழைத்து சந்தித்தாரே ஒழிய அவர் கரூருக்கு செல்லவில்லை. இவ்வளவு ஏன் கட்சிக்காக உழைத்த அஜிதா, தற்கொலை முயற்சி செய்து கொண்ட நிலை மனிதாபிமான அடிப்படையில் தானோ அல்லது கட்சி நிர்வாகிகளையோ அனுப்பி அவருக்கு ஆறுதல் கூறாத விஜய், மலேசியா புறப்பட்டுள்ளது.
இப்படி எந்த சூழலிலும் மக்களுடன் மக்களாக பயணிக்க விஜய் கட்சியில் இணைந்து அவருடன் பணியாற்றுவது தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என அவர் கூறியிருப்பதை அதிமுக, திமுகவில் செங்கோட்டையன் மீது சாப்ட் கார்னரில் இருக்கும் சிலர் வருந்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications