அடங்கவே மாட்டோம்.. ஈரோடு நோக்கி வேகமாக வந்த விஜய்யின் கார்.. திடீரென தடுத்து நிறுத்திய தொண்டர்கள்!
ஈரோடு: கோவையில் இருந்து சாலை மார்க்கமாக தவெக தலைவர் விஜய் ஈரோடு நோக்கி வந்த நிலையில், பெருமாநல்லூர் புறவழிச்சாலையில் விஜய்யின் வாகனத்தை தொண்டர்கள் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். தவெக தலைமை அறிவுறுத்தலை கொஞ்சம் கூட மதிக்காமல் விஜய்யின் வாகனத்தையும் தொண்டர்கள் பலரும் பின் தொடர்வது தொடர் கதையாகி இருக்கிறது.
கரூர் சம்பவம் நடந்து 82 நாட்களுக்கு பின் தவெக தலைவர் விஜய் ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். தவெகவில் செங்கோட்டையன் இணைந்து 20 நாட்களிலேயே ஈரோடு மாவட்டத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருப்பது அக்கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ஈரோடு பெருந்துறை அருகே சரளையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதால், தவெகவினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 2 மணி நேரம் மட்டுமே பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வாங்கிய செங்கோட்டையன், தொண்டர்களுக்கான தண்ணீர் வசதிகளை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
அதேபோல் காலை 8 மணியளவிலேயே விஜய்யும் சென்னையில் இருந்து கோவை நோக்கி விமானத்தில் புறப்பட்டார். கோவையில் இருந்து சாலை மார்க்கமாக ஈரோடு பெருந்துறை பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு விஜய் பயணித்தார். கோவையில் விஜய்யை பார்க்க கூட்டம் கூடிவிடக் கூடாது என்பதால், பேரிகார்டுகள் அமைக்கப்பட்டது.
அதையும் மீறி விஜய்யை பார்க்க பலரும் கூறினர். தொடர்ந்து விஜய் காரையும் தொண்டர்கள் பலரும் பின் தொடர்ந்து வந்தனர். இதனிடையெ பெருமாநல்லூர் புறவழிச்சாலையில் விஜய்யின் வாகனத்தை தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர்.அப்போது அங்கிருந்த தவெக தொண்டர்களை விஜய் கண்ணாடியை இறக்கி கைகளை அசைத்துவிட்டு புறப்பட்டு சென்றார். இதனால் தவெக தொண்டர்கள் அடங்க மாட்டார்கள் என்று பலரும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications