‘அரங்கேற்றம்’ நாயகி போல.. என்னை நானே சீரழித்து.. படுபாதாளத்துக்கு போனேன்! கண்ணீரை வர வைத்த வைகோ!
ஈரோடு: பொடா சட்டத்தில் தன்னை 19 மாதங்கள் சிறையில் அடைத்த அதிமுகவுடன் கூட்டணி வைத்ததாகவும், 'அரங்கேற்றம்' படத்தின் நாயகி போல தன்னையும் சீரழித்து தனது வாழ்க்கையையும் சீரழித்துக் கொண்டதாக உணர்வுபூர்வமாக பேசியிருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளரான வைகோ. கூட்டணி கணக்கில் தவறுகள் செய்தால் அரசியலில் பாதிக்கப்பட்டதாகவும் வேதனையுடன் கூறியுள்ளார்.
ஈரோடு மேட்டூர் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோவை மண்டல தேர்தல் நிதியளிப்பு விழா கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் தலைமையில்
நடைபெற்றது.
மதிமுக பொருளாளர் செந்தில் அதிபன் முன்னிலை வகிக்க, ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் நா.முருகன் வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு, மண்டல நிர்வாகிகள் திரட்டி வழங்கிய தேர்தல் நிதியைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

வைகோ உரை
அப்போது அவர் பேசுகையில், திராவிட இயக்கத்திற்காக ஈரோடு மண்ணிலிருந்து உழைக்கத் தொடங்கிய தனது நீண்ட நெடிய அரசியல் பயணத்தின் முக்கியத் திருப்புமுனைகளை உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, 1989-ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் மூண்டிருந்த சூழலில், திமுகவிற்கும் புலிகளுக்கும் இடையே எவ்வித முரண்பாடும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே தனது உயிரைப் பணயம் வைத்து வன்னி காடுகளுக்குச் சென்றதாகத் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணி
கடந்த காலத்தில் நான் சில பிழைகளைச் செய்திருக்கிறேன். அதை நான் ஒப்புகொள்கிறேன். என் நம்பகத்தன்மையை நானே நாசமாக்கிக் கொண்டேன். என்னுடைய அரசியல் வாழ்வின் நம்பகத்தன்மையை சுக்குநூறாகியது. எந்த அதிமுக பொதுச்செயலாளர் 19 மாதம் சிறையில் அடைத்தாரோ, அதே அண்ணா திமுகவோடு உடன்பாடு வைத்ததைப் போன்ற ஒரு பிழையான, தவறான, மன்னிக்க முடியாத ஒரு முடிவு எடுத்திருக்கவே முடியாது.
அரங்கேற்றம் திரைப்படம்
ஆனால் அந்த முடிவை எடுப்பதற்கு என்னோடு இருந்த தலைமை நிர்வாகிகள் அனைவருமே, அவர்களோடு கூட்டு வைத்தால் 25 எம்எல்ஏக்களுக்கு குறையாமல் நாம் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் பிரவேசிக்கலாம். கட்சிக்கு புத்துயிர் வரும், கட்சியை வளர்க்க முடியும் என்று சொன்னார்கள். பிரம்மாண்டமான திரைக்காவியங்களைத் தயாரித்த பாலச்சந்தர், அரங்கேற்றம் திரைப்படத்தில் தன் தம்பி மருத்துவக் கல்லூரியிலே படிக்க இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல் தலைவனைச் சந்திக்கச் சென்ற அந்தப் பெண் நாசமாக்கப்பட்டதால், அதற்குப் பிறகு கட்டணம் செலுத்துவதற்குப் பணம் தயாரிக்க முடியாத நிலையில் தன்னையே அழித்துக் கொண்டாள், வழிதவறிப் போனாள்.
கூட்டணி அரசியல்
அப்படிப்பட்ட மோசமான முடிவுக்கு ஆட்பட்டு அவள் தன்னுடைய உடல் வாணிபம் செய்து தம்பியை டாக்டராக்குவதற்குப் பாடுபட்டாளாம், கடைசியில் பைத்தியம் பிடித்தவளாக அவள் கொட்டடித்துக் கொண்டிருப்பதோடு அந்த காட்சி முடிந்துவிடும். நான் சொன்னேன், அரங்கேற்றம் கதாநாயகியைப் போல நான் ஆகிவிட்டேன் என்று. என்னை நானே என்னுடைய நம்பகத்தன்மையை அழித்துக் கொண்டு இந்த முடிவுக்கு வந்தேன் என்று சொன்னேன். இன்று வரை அது எங்கோ இமயம் போல் நிமிர்ந்திருக்க வேண்டிய நான் படுபாதாளத்துக்கு நான் போனேன்.
மு.க.ஸ்டாலின்
அதற்குப் பிறகு இனி மீண்டும் அப்படி எந்த விமர்சனத்துக்கும் ஆளாகிவிடக் கூடாது ஒரு முடிவை எடுத்தோம். எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்த போதிலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கட்சியின் பணிகளுக்காகவும், நடைப்பயணங்கள் மூலமாகவும் தொடர்ந்து களத்தில் நின்றேன். தற்போது திராவிட இயக்க பூமியைச் சிதைக்கத் துடிக்கும் இந்துத்துவா மற்றும் ஆர்.எஸ்.எஸ் சக்திகளை முறியடிக்கவே திமுக மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கரங்கோர்த்துள்ளோம். கூட்டணி தர்மத்தை மதிப்பதில் மதிமுக என்றுமே உறுதியாக இருக்கும்" என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications