பங்காளி துரைமுருகன் கண்ணில் விரல் விட்டு ஆட்டியவன் நான்! மாப்ள அக்.9ஆம் தேதி இருக்கு! -வேல்முருகன்
ஈரோடு: சட்டசபையில் என் பங்காளி துரைமுருகன் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவன் நான், நீங்களெல்லாம் எனக்கு எம்மாத்திரம் என்று ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் மீது அளவு கடந்த கோபத்தை கொட்டித்தீர்த்துள்ளார் வேல்முருகன்.
சட்டசபை கூடும் அக்டோபர் 9ஆம் தேதி அன்று ''உங்களுக்கு கச்சேரி இருக்கு மாப்ள'' என்று ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளையும், ஈரோடு காவல்துறையினரையும் அவர் சாடியிருக்கிறார்.

ஈரோட்டில் என்ன நடந்தது வேல்முருகனின் கோபத்துக்கு என்ன காரணம் என்பது பற்றி பார்க்கலாம். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டத் முயலும் கர்நாடக அரசை கண்டித்து ஈரோட்டில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வேல்முருகன் பங்கேற்று உரையாற்றியதால் அவரது கட்சியினர் ஆர்வத்துடன் நகரின் பல இடங்களிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடிகளை நட்டுள்ளனர். அதேபோல் விளம்பர பேனர்களையும் ஆங்காங்கு வைத்திருக்கின்றனர். இந்நிலையில் காவல்துறை தரப்பிலும், மாநகராட்சி அதிகாரிகள் தரப்பிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் கடும் கெடுபிடி காட்டப்பட்டிருக்கிறது.
நடப்பட்ட கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டிருக்கிறது. இந்த விவரத்தை ஈரோடு வந்தடைந்த வேள்முருகனிடம் கட்சி நிர்வாகிகள் சொல்லியிருக்கின்றனர். இதையடுத்து மேடையில் பேச்சை தொடங்கும் போதே ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளை வெளுத்து வாங்க ஆரம்பித்தார் வேல்முருகன்.
''என்னை யாருன்னு நினைச்சுடீங்க, தொலைச்சுபுடுவேன் தொலைச்சு, சட்டசபையில் என் பங்காளி துரைமுருகன் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவன் நான், நீங்களெல்லாம் எம்மாத்திரம், உங்களுக்கு இருக்கு மாப்ள, அக்டோபர் 9ஆம் தேதி சட்டசபை கூடட்டும் வச்சுக்கறேன்'' என மொத்த கோபத்தை கொட்டும் மழையில் கொட்டித் தீர்த்தார்.
திமுகவை சேர்ந்த ஈரோடு மேயர் நாகரத்தினம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் மொத்த பயோடேட்டாவையும் கட்சி நிர்வாகிகளிடம் வாங்கிக்கொண்ட வேல்முருகன், சட்டசபையில் இது பற்றி பேசி வெளுத்து வாங்கவுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications