Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூரை கண்டும் திருந்தலையே.. கைக்குழந்தையுடன் விஜயை பார்க்க வந்த பெற்றோர்! திருப்பி அனுப்பிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: கரூர் சம்பவத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பின் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய், பொதுவெளியில் ஈரோட்டில் இன்று மக்கள் சந்திப்பை நடத்துகிறார். இந்த நிலையில் காவல்துறை அறிவுறுத்தல்களையும் மீறி தவெக தொண்டர்கள் விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போலீசார் எச்சரிக்கையை மீறி குழந்தைகளுடன் வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பியுள்ளனர்.

கரூரில் நடைபெற்ற சம்பவத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளியைத் தொடர்ந்து, நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், இன்று ஈரோட்டில் பொதுமக்களை நேரில் சந்திக்கிறார்.

விஜயமங்கலம் அருகே சரளையில் நடைபெறும் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வு, அரசியல் வட்டாரங்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இந்த பொதுக்கூட்டத்துக்காக சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

Vijay Erode Police

கூட்டத்தில் பங்கேற்க எந்தவிதமான பாஸ், கியூஆர் கோடு உள்ளிட்ட அனுமதிச் சீட்டுகள் தேவையில்லை என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டதால், எதிர்பார்ப்பை விட அதிக அளவில் தொண்டர்களும் பொதுமக்களும் திரள வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி, நள்ளிரவு முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தவெக தொண்டர்கள் ஈரோடு நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.

வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், கார்கள் மற்றும் பெரிய வாகனங்களுக்கு சுமார் 60 ஏக்கர் பரப்பளவிலும், இருசக்கர வாகனங்களுக்கு 20 ஏக்கர் பரப்பளவிலும் தனித்தனி வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக வாகன நிறுத்தத்திற்காக மட்டும் 80 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை மக்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.

இதற்கிடையே, காவல்துறை முன்கூட்டியே வெளியிட்டிருந்த அறிவுறுத்தல்கள் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. குறிப்பாக, கூட்டத்துக்கு குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியிருந்த நிலையில், அந்த எச்சரிக்கையை மீறி குழந்தைகளுடன் வந்த சிலரை காவல்துறையினர் திருப்பி அனுப்பியுள்ளனர். பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதலே கூட்டம் நடைபெறும் பகுதி முழுவதும் தவெக கொடிகள், பேனர்கள், கோஷங்கள் என திருவிழா போல காணப்படுகிறது. கூட்டம் தொடங்க இன்னும் நேரம் இருப்பதால், மேலும் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போலீசார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் நேரடியாக பொதுமக்களை சந்திப்பதால், அவர் என்ன பேசப்போகிறார், அரசியல் ரீதியாக என்ன செய்தி அளிக்கப்போகிறார் என்பதில் ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகளும் கவனமாக எதிர்பார்த்து வருகின்றன.

விஜயின் மக்கள் சந்திப்பு தொடர்பாக ஏற்கனவே காவல்துறை தரப்பிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைப்பிலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருந்தது. குறிப்பாக விஜயின் வாகனத்தை இருசக்கர வாகனங்களில் பின் தொடரக்கூடாது, பள்ளி குழந்தைகளை அழைத்து வரக்கூடாது, கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் வீட்டிலிருந்தே நேரலையில் விஜயின் பேச்சைக் கேட்க வேண்டும், மரங்கள், மின்கம்பங்கள், ட்ரான்ஸ்ஃபார்மர்கள் அருகே செல்லக்கூடாது என பல வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருந்தும் அவற்றை தவெக தொண்டர்கள் மீறி வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+