தம்பி இறங்குப்பா.. சொன்னா கேளு! ஈரோட்டிலும் கம்பத்தில் ஏறிய தம்பிகள்! டென்ஷனான விஜய்
ஈரோடு: ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பாம்பு கதை கூறிக் கொண்டிருக்கும்போது ரசிகர்கள் சிலர் அங்கிருந்த மின்கம்பத்தில் ஏறினர். இதனால் அதிருப்தி அடைந்த விஜய், "தம்பி கீழ இறங்குப்பா.. கீழே இறங்குப்பா" என இரு முறை கூறியும், அவர்கள் இறங்காததால் "கீழ இறங்கினால் தான் முத்தம் கொடுப்பேன்" எனக்கூறி இறங்க வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று (18ஆம் தேதி) தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த உள்ளார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின்னர் நடைபெறும் முதல் நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

கரூர் சோக சம்பவத்திற்கு பிறகு நடைபெறும் நிகழ்ச்சி என்பதாலும், விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பு பொதுமக்களுக்கும் அரசியல் வட்டாரங்களுக்கும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் முதன்முறையாக பொதுவெளியில் மக்களை சந்திக்கும் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அதிமுக முன்னாள் அமைச்சர், தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருக்கும் செங்கோட்டையன் பிரம்மாண்டமாக செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் பேசிய விஜய்," நல்ல காரியங்களுக்கு மஞ்சளுடன் துவக்கம் இருக்கும். நமது கொடியும் மஞ்சளுடன் உள்ளது. மங்களகரமான ஈரோட்டில் இருந்து உணர்வு பூர்வமான விஷயங்கள் உள்ளது. காலிங்கராயன் கால்வாய் வரலாறு கொண்டது. அவரது தாயார் கொடுத்த தைரியத்தில் கால்வாய் கட்டினார் காலிங்கராயன். அப்படி ஒரு தைரியத்தை நீங்கள் எனக்கு கொடுத்திருக்கிறீர்கள்.
துணையாக நிற்கிறீர்கள் இதை எப்படி கெடுக்கலாம் சூழ்ச்சி செய்து கெடுக்க நினைக்கும் கூட்டத்திற்கு தெரியாது இது 30 ஆண்டுகளுக்கு மேலான உறவு. இந்த விஜய்யை இந்த விஜியை மக்கள் கைவிட மாட்டார்கள் என்பது சூழ்ச்சியாளர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. நிற்பீங்க தானே" என பேசினார்.
அப்போது, விஜய் பாம்பு கதை கூறிக் கொண்டிருக்கும்போது ரசிகர்கள் சிலர் அங்கிருந்த மின்கம்பத்தில் ஏறினர். இதனால் அதிருப்தி அடைந்த விஜய், "தம்பி கீழ இறங்குப்பா.. கீழே இறங்குப்பா" என இரு முறை கூறியும், அவர்கள் இறங்காததால் "கீழ இறங்கினால் தான் முத்தம் கொடுப்பேன்" எனக் கூறி இறங்க வைத்தார். தற்பொது இந்த காட்சிகள் சமூக வலைதலங்களில் பேசு பொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications